techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


Thirai Vimarsanam 03.01.2013 - Sun Tv - Neethane En Pon Vasantham

Posted: 03 Feb 2013 10:55 AM PST


Thirai Vimarsanam 03.01.2013 - Sun Tv - Neethane En Pon Vasantham

Kollywood Diaries - 03-01-2013 Kamal Interview | Kollywood Diaries Interview With Actor Kamal | Sun Music Kollywood Diaries Kamal | Sun Music Interview With Actor Kamal

Posted: 03 Feb 2013 10:13 AM PST



Kollywood Diaries - Kamal Haasan - Sun Music 03-01-2013 | Kollywood Diaries Interview With Actor Kamal | Sun Music Kollywood Diaries 03nd february 2013 Kamal Promo | Sun Music Interview With Actor Kamal 03 Feb 2013,kamal interview 03nd february 2013,kamal interview sun music 03-01-13,kollywood diaries 03-01-2013,sun music kamal interview 03 feb 2013,kollywood diaries february,sun musc kamal haasan 03nd feb 2013 onlinw,kamal hasan kollywood diaries,kamal kollywood diaries,kollywood kamal sun music,sun music intervuiew kamal hasan,sun music special kolly wood diaries,kamal interview sun music,kaml interview,sun music special kamal interview 03nd feb 2012.

Siricha Pochi in Adhu Idhu Yedhu

Posted: 03 Feb 2013 10:38 AM PST

Vada Pochae 03-03-13|Vada Pochae 03.03.13 | Sun Music Tv Show Online | Vada Pochea Candid Show in Sun Music by Sarithira 03-03-2013 | Vada Pochea Candid Show 03.03 -2013 Sun Music tv Program | Vada Pochea 03st February 2013 Show | Sun Music Vada Poche 03-03-13

Posted: 03 Feb 2013 10:00 AM PST



Vada Pochae 03-03-13|Vada Pochae 03.03.13 | Sun Music Tv Show Online | Vada Pochea Candid Show in Sun Music by Sarithira 03-03-2013 | Vada Pochea Candid Show 03.03 -2013 Sun Music tv Program | Vada Pochea 03st February 2013 Show | Sun Music Vada Poche 03-03-13

Seeman Interview on Three Persons Death Sentence

Posted: 03 Feb 2013 10:26 AM PST

Siege of UN Offices Around World on 12th February

Posted: 03 Feb 2013 10:24 AM PST

Neeya Naana 03-02-13 | Watch Neeya Naana 03-02-13 | Neeya Naana 03-02-13 Vijay Tv | Neeya Naana 03-02-13 Online | Neeya Naana 03th February 2023 | Neeya Naana 03-02-13

Posted: 03 Feb 2013 09:31 AM PST

Neeya Naana 03-02-13 | Watch Neeya Naana 03-02-13 | Neeya Naana 03-02-13 Vijay Tv | Neeya Naana 03-02-13 Online | Neeya Naana 03th February 2013 | Neeya Naana 03-02-13
















Neeya Naana -Vijay Tv Show 03-02-13 Youtube Video HQ,Neeya Naana 03-02-2013 | vijay Tv 03-02-13 Program Neeyaa Naanaa 03th February 2013 | Neya Nana show,Neeya Naana 03-02-13,Watch Neeya Naana 03-02-13,Neeya Naana 03-02-13 Vijay Tv,Neeya Naana 03-02-13 Online,Neeya Naana 03th February 2013,Neeya Naana 03-13-13,Neeya Naana 03-02-2013 | Vijay Tv Shows Neeya Naana 03th February 2013,Vijay Tv Neeya Naana 03-02-2013 show | Neeya Naana 03-02-13 | Vijay Tv sunday show 03th February 2013 this week watch online,Vijay Tv Neeya Naana 03-02-2013 | Vijay Tv | Vijay Tv Neeya Naana | Vijay Tv Show | Neeya Naana Online Show | Neeya Naana 03 February 2013,Neeya Naana 03-02-2013 | Vijay Tv | Vijay TV Neeya Naana | Neeya Naana 03/02/2013 | Neeya naana 03.02.2013
neeya naana February 03,neeya naana 03/02/2013,neeya naana 03-02-2013,NEEYA NAANA February 03 2013,vijay tv neeya naana 03 02 2013,neeya naana 03 February 2013,neeya naana 03-02-13,neeya naana 03 February,neeya naana Feb 03,vijay tv neeya naana 03 02 13,neeya naana on 03 02 2013,neeya naana 03th Feb 2013,neeya naana 03/02/2013,vijay tv neeya naana 03-02-2013,vijy tv niyanana,vijay tv neeya naana February 03 2013,vijay tv neeya naana 03 02 2013,neeya naana 03 February 2013,neeyanaana03 02 2013,vijaj tv niya nana,neeya naana February 03/02/2013,neeya naana February03 2013,neeya naana February 03 02 2013,neeya naana Feb 03,Feb 03 2013 neeya naana,vijay tv neeya nanana on 03 02 2013,neeya naana latest 03/02/2013,vijay tv neeya naana Feb03,neeya naana on 03 02 2013,neeya naaana,03th Feb neeya naana,neya naana Feb 03,neeya naana on 03-02-2013,February 03 2013 neeya naana,neeya naana 03th Feb,neeya naana last week February,vijay t v neeyanaana February 2013,neeyanaana Feb 03 2013,Neeya naana- 03- 02- 2013 episode,vijay tv neeya naana February 032013,vijay tv neeya naana actober 2013,neeya naana august 2013 February,neeya nanna February 03 2013,neeya naana episodes for February,vijay tv neeya naana February 03,neeya naana in 03-02-13,neeya naana last week episode watch online,neeya naana latest 2013 February,Neeya Naana03-02-2013 – Vijay Tv,neya nana 03 Feb,

Vijay Tv Kitchen Super Stars - 03-02-13 | Kitchen Superstars 03-2-2013 Vijay Tv Show | Kitchen Super Stars 03rd February 2013 | Vijay Tv Kitchen Supe Stars Cooking Show | Vijay Tv Kitchen Super Star Online | Vijay Tv Kitchen Super Star Online 03-02-13 | Vijay Tv Shows Online Free | Watch Vijay Kitchen Super Stars

Posted: 03 Feb 2013 08:46 AM PST












kitchen superstar vijay tv episodes,kitchen super star vijay tv 03-2-13,kitchen super star vijay tv episode 7,vijay tv programs kitchen super star program,vijay tv kitchen superstar episode,kitchen superstar vijay tv episode 7 ,vijaytvkitchensuper,kitchen superstar vijat tv new eposide,kitchen superstar vijay tv latest episode,vijay tv kitchen superstar 03-02-2013,vijay tv kitchen super star episodes,vijay tv kitchen super star 03 02 13,vijay tv kitchen super star,vijay tv kitchen,vijay super kitchen 03rd February 2013,watch vijay tv kitchen super s online online,vijay tv kitchen superstar 03-02-2013,vijay tv kitchen superstar episode 7 part 5,viji show supper kitchen,vijaytv kitchen supper stars 03-02-2013,vijaytv kitchen super stars youtube,vijay tv2013 wallpaer,vijay tv star kitchen program 03 02 2013,vijay tv shows kitchen super star 03/02/2013,Vijay TV Show Kitchen Superstars 20-01-13,vijay tv kitchen superstar episodes,vijay kitchen super,tamil vijay tv program kitchen super star first episode,kitchen super stars 03/02/2013,kitchen super stars 03 02 13,kitchen super star vijay tv February 03,kitchen super star vijay tv 03/02/13 you tube,kitchen super star vijay tv 03/13,Kitchen Super Star vijay tv 03-02-2013,KITCHEN super star v,kitchen super star on vijay t v,kitchen super stars vijay tv last episode,kitchen super statrs 03-02-2013,kitchen superstar tamil show,
star kitchen 03/13,kitchen superstarsvijay tv,kitchen superstars vijay tv 03 Feb 2013,kitchen superstars in vijaytv part2,kitchen superstars 03-02-2013,kitchen superstar vijay tv episodes 7,kitchen superstar vijay tv 03/02/13,kitchen superstar vijay tv 03 02 13,13 Jan kitchen super,

SPB and Chitra sings En Kanmani

Posted: 03 Feb 2013 10:15 AM PST


A lovely duet by SPB and Chitra. En Kanmani from Chittukkuruvi in Isaignaniyin Isai Payanam

Singer Harini Interview

Posted: 03 Feb 2013 10:12 AM PST

இனி விஸ்வரூபம் சரியான விமர்சனங்களை சந்திக்கும் நேரம்

Posted: 03 Feb 2013 10:09 AM PST


விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசும், இஸ்லாமிய அமைப்புக்களும் தடையாக இருந்த காரணத்தால் கமலுக்கு பலத்த ஆதரவு கிளம்பியது பழங்கதையாகிவிட்டது.

உண்மையில் தமிழக முதல்வருக்கும், இஸ்லாம் சகோதரர்களுக்கும் கமல் பூமாலை போட்டு வணங்க வேண்டும், பிரச்சாரத்திற்கு கொட்ட வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்யாமலே கமல் பிரச்சாரம் தேடிக் கொள்ள அவர்களே காரணம்.

ரஜினியின் எந்திரன் படத்தைவிட பட்டி, தொட்டி எல்லாம் விஸ்வரூபம் என்றொரு திரைப்படம் இருப்பது தெரியவந்தது இவர்கள் செய்த மடைத்தனமான வேலையால்தான் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

மறுபுறம் டெல்லி பாலியல் குற்றவாளிகள் போலவே, திரைப்படங்களை பகிஸ்கரிப்பவர்களும் அதி உச்ச தண்டனைக்குரிய கிரிமினல் குற்றவாளிகளே என்ற பார்வையை விஸ்வரூபம் பகிஷ்கரிப்பு ஏற்படுத்தியதும் வரவேற்கத்தக்கதே.

இப்போது 144 தடை விலகி விஸ்வரூபம் திரைக்கு வர இருப்பதால் அந்தப் படத்தின் கதைக்கட்டமைவில் உள்ள மோசமான ஓட்டைகள் இனித்தான் சந்திக்கு வர இருக்கின்றன.

கமல் ஒரு றோ அதிகாரியாக நடித்திருப்பதே கதையில் உள்ள மோசமான ஓட்டையாகும், அதிலிருந்து கமலின் தேடலின் ஓட்டைகள் படிப்படியாக விஸ்வரூபம் எடுக்கின்றன.

கமல் கற்பித்திருக்கும் ஆப்கான், அமெரிக்கப் போர் ஒரு ஆனந்தவிகடன் அறிவுக்குட்பட்ட பார்வை என்பதும் விமர்சனத்திற்கு வரலாம்.

ஒரு றோ அதிகாரியை நியாயப்படுத்தியதால் வந்த தர்மத்தின் தண்டனையே இதுவரை கமல் பட்ட பாடு என்றும் றோவினால் பாதிக்கப்பட்டவர் சாபமிடவும் வழியிருக்கிறது.

போயும் போயும் ஒரு றோ அதிகாரியா இறைவன் போல விஸ்வரூபம் எடுத்து உலகப் பயங்கரவாதத்தை அழிக்கப் போகிறார் என்ற கோணத்தில் பார்த்தால் கமலின் தப்பிதங்களை எளிதாகப் புரிய முடியும்.

தடை மட்டும் வராவிட்டால் படத்தின் கதையின் ஓட்டை நார் நாராக கிழிபட்டிருக்கும் அதிலிருந்தும் இதுவரை கமல் தப்பியுள்ளார்.

தமிழகத்தில் திரைப்படம் வெளியாக சரியான விமர்சனங்கள் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கும்.

காரணம் தொழில் நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய சிறப்புப் போல கதையில் மிகப்பெரிய பாதாள ஓட்டை இருக்கிறதை இதுவரை யாரும் சுட்டிக்காட்டவில்லை.

டேவிட் – திரை விமர்சனம்

Posted: 03 Feb 2013 10:08 AM PST


ஒரே பெயர், இருவேறு வாழ்க்கை! இப்படிதான் இந்த படத்திற்கு சின்னதாக ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்கள் ரிலீசுக்கு முன்பு. 'ஒரே இலை, இருவேறு கிழிசல்' என்றும் கொடுத்திருக்கலாம்.

நுனி நாக்கு ஆங்கிலம், காரில் வந்து இறங்குகிற வசதி. நட்சத்திர பார் ஒன்றில் உட்கார வைத்து 'நாட்' சொல்லுகிற அளவுக்கு பைசா பலம். இவை மூன்றுக்கும் தகுதி இருந்தால் போதும். முழுக்கதையையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிற ஹீரோக்களுக்கு 'செய்வியா… செய்வியா…' என்று சட்டையை பிடித்து 'செய்வினை' வைக்கிறார்கள் இவர்கள். அஜீத்திற்கு ஒரு சக்ரி டோலட்டி என்றால், ஜீவா-விக்ரம் இருவருக்கும் ஒரு பிஜாய் நம்பியார். (பேர்லேயே நம்பியார் இருக்காரே, புரிஞ்சுருச்சுப்பா)

ஜீவாவுக்கும் விக்ரமுக்கும் ஒரே பெயர், டேவிட். இவர் கதை ஒரு பக்கம் ஒடுகிறது. அவர் கதை இன்னொரு பக்கம் ஓடுகிறது. இரண்டு பேரையும் கிளைமாக்சில் சேர்ந்து உட்கார வைத்து ஒரு டயலாக்கை பேச விட்டால் அது எப்படி அய்யா புதுமையாகும்? இதுபோன்ற புதுமைகள் படம் முழுக்க விரவிக் கிடப்பதால் டேவிட், டேய் 'விட்' என்றும் அழைக்கப்படலாம்.

கிடார் கற்றுக் கொள்வதை தவிர வேறு வேலை ஏதும் பார்க்காதவரான ஜீவாவுக்கு ஒரு அன்பான அப்பா. அவரது முழு நேர தொழில் ஏசுவின் நாமத்தை ஜபிப்பது. அப்படியே ஊரார்க்கும் போதித்து தன் மதத்தின் மீது நம்பிக்கையை விதைப்பது. இவர் மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டுகிற ஒரு இந்துத்வா கும்பல், இவரை போட்டு பேய் மிதி மிதிக்க, உதைத்தவர்களையும், உதைக்க ஏவியவர்களையும் தேடிப்போய்…., -மிதிக்கிறாரா ஜீவா? ம்க்கூம்… மிதிபட்டு அழுகிறார். அப்புறமும் கையில் கத்தியோடு அந்த கூட்டத்தின் தலைவியை போட்டுத்தள்ள எத்தனிக்கும் போது, ஜீவாவின் லட்சியத்தை வேறொருவன் நிறைவேற்றி வைக்க, அங்கேயும் ஹீரோயிசம் புஸ்ஸ்ஸ்… அப்புறம் பாதிரியாராகி அப்பாவின் லட்சியத்தை அடைகாக்கிறார் பிள்ளை.

இன்னொரு பக்கம் விக்ரம். குவார்ட்டர் கோவிந்தன், பிராந்தி பீர்பால், விஸ்கி விஷ்ணுவாகி சதா நேரமும் குடியிலேயே மிதக்கிறார். நடு நடுவே போதை தெளியும்போதெல்லாம் அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒருத்தியை கல்யாணம் கட்டிக் கொள்ள ரூட் போடுகிறார். விக்ரமின் வரலாற்றில் இப்படி ஒரு சொதப்பல் படம் வந்ததேயில்லை என்கிற அளவுக்கு மண்டை காய்ந்து போகிறது நமக்கு.

படம் துவங்கி சிறிது நேரம் வரைக்கும், என் அக்கா அவன் கூட ஓடிட்டா. உன் பொண்டாட்டி யார் கூட ஓடுவா? தங்கச்சி ஓடிட்டாளா என்று வியத்தகு வசனங்கள் பேசி பெண்ணியத்தை பேய் இனமாக்கி ஊனப்படுத்துகிறார்கள். போதும் போதாமல் ஊனமுற்றவர்களையும் ஏகத்திற்கும் கிண்டலடிக்கிறார்கள்.

இஷா ஷெர்வானிதான் விக்ரமுக்கு ஜோடியாக போகிறார் என்று நம்ப வைக்கிறார் டைரக்டர். அட யாருக்காவது கட்டி வச்சு படத்தை முடிங்கப்பா என்று அந்த நம்பிக்கையையும் பொறுமையிழக்க வைக்கிறது இழுவை. நல்லவேளை. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு.

இப்படத்தில் தபுவும் இருக்கிறார். கடைசியில் தபுவை விக்ரம் கட்டிக் கொள்வதற்கு என்ன அர்த்தமோ? அவரது புருஷன் என்றொரு அட்டக்கத்தில், பிள்ளையை தூக்கிக் கொண்டு 'என்னமோ நடந்துட்டு போகட்டும்' என்ற முன்னாலே நடையை கட்டுகிறார். படத்தின் மிக அருமையான திருப்பம் இது. லாராதத்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அழகான அவரை ஒரு ஆன்ட்டியாக பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.

கண்ணில் ஒற்றிக் கொள்கிற ஒளிப்பதிவை தவிர படத்தில் வேறு எதையும் உருப்படியாக சொல்லவே முடியவில்லை. ரத்னவேலுவுக்கும், பி.எஸ்.வினோத்துக்கும் ஒரு ஸ்பெஷல் வணக்கம். ஏழெட்டு பேர் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அனிருத் இசையில் ஒரு பாடல் மட்டும் மனசை என்னவோ செய்கிறது. பின்னணி இசை? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி…

சூனியம் வைப்பவர்களும், பில்லி ஆவிகளை ஏவி விடுகிறவர்களும் கேரளாவில்தான் அதிகம் உண்டு என்கிறது நிஜ தகவல்கள். அப்படி ஒருவரைதான் ஜீவா-விக்ரமுக்கு அனுப்பி வைத்திருக்கிறது சாத்தான்களின் தேசம்! இனிமேலாவது சுதாரிச்சுக்குங்க கண்ணுங்களா….

கடல் காவு கொடுக்கத் தயாராகின்றன தியேட்டர்கள்?

Posted: 03 Feb 2013 10:07 AM PST


விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்பார்ப்புகள் பெரிதாகவே இருப்பதால் அப்படத்தைத் திரையிடுவதில் தமிழக தியேட்டர்களிடம் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. இதனால் கடல் படத்தைத் தூக்கி விட்டு விஸ்வரூபத்தைப் போட பல தியேட்டர்கள் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

விஸ்வரூபம் பெரும் சிக்கலைக் கடந்து ஒரு வழியாக வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கமல்ஹாசன் தரப்பு இறங்கியுள்ளது. படத்தில் 7 காட்சிகளை எடிட் செய்யும் பணிகளை கமல்ஹாசன் தரப்பு முடுக்கி விட்டுள்ளது. வெள்ளிக்கிழமை படம் திரைக்குவரலாம் என்று தெரிகிறது.

ஆனால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அப்படம் திரையிடப்படுவதாக இருந்த பல தியேட்டர்களில் கடல் மற்றும் டேவிட் ஆகிய படங்களை திரையிட்டுள்ளனர். இதனால் விஸ்வரூபம் படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்காது என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் கடல் படம் சரியில்லை என்று ரிசல்ட் வெளியாக ஆரம்பித்திருப்பதால், அப்படத்தைத் தூக்கி விட்டு விஸ்வரூபம் படத்தைப் போடும் மன நிலைக்கு பெரும்பாலான தியேட்டர்கள் வந்துள்ளதாக புதிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் அப்படி என்னதான் உள்ளது இப்படத்தில் என்ற எண்ணத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். எனவே படத்தில் சில காட்சிகளை ரத்து செய்தாலும் கூட படத்தில் என்னதான் சொல்லியுள்ளார் கமல் என்பதை அறியும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே படத்திற்கு பெரும் கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதை மனதில் வைத்தே கடல் படத்தை தூக்கி விட்டு விஸ்வரூபத்தைப் போட தியேட்டர் நிர்வாகங்கள் பல முடிவு செய்திருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

கருணாநிதி உட்பட மௌனம் காத்த விஸ்வரூபம்

Posted: 03 Feb 2013 10:06 AM PST


இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது காலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மாலையில் அதனை முடித்துக் கொண்டு, இது சகோதரச் சண்டை என 30 ஆண்டு யுத்தத்துக்கு விளக்கம் கொடுத்தபடி மத்திய அரசுக்கு எந்த வித பெரிய அழுத்தமும் கொடுக்காது இருந்த கலைஞர் கருணாநிதி உட்பட மௌனம் காத்த பல அரசியல்வாதிகள் கமலஹாசன் என்ற கலைஞனுக்கு ஆதரவாக இன்று அறிக்கைகளை வழங்கிய வண்ணம் இருக்கின்றார்கள்.

சுமார் ஒரு மாதத்துக்கு மேல் தனித்து நின்று போராடிய கமலஹாசன் தான் மதவாதம் இல்லாத ஒரு மாநிலத்துக்கு அல்லது நாட்டுக்கு செல்வேன் என்று இன்று அறிக்கை விட்டதும் சகோதரக் கலைஞர்கள் எல்லாம் தங்களின் எதிர்ப்பை தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு காட்டாமல் தங்களின் அனுதாபத்தை கமலஹாசனுக்கு காட்டியபடி இருக்கின்றார்கள்.

முஸ்லீம் இனச்சகோதரர்களின் மனதை நோகடிக்கும் காட்சிகள் என இந்தப் படத்தில் வந்த பொரும்பான்மையான காட்சிகள் முன்பு பல இணையத்தளங்களில் வந்தவையே. பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் மனிதநேயத்தை காலில் போட்டு மிதிக்கும், அண்மைக் காலங்களில் இடம் பெற்ற பல காட்சிகள் இந்தப் படத்தில் வந்துள்ளன.

மக்கள் மன்றத்தின் முன்னால் நிறைவேற்றப்பட்ட றிசானாவின் மரணதண்டணைக்கும் சிலகாலங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபடி பத்திரிகையாளர்களுக்கு தீவிரவாதிகள் அளித்த மரணதண்டனைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. முதலாவது அரசாங்கம். இரண்டாவது தீவிரவாதம். இரண்டிலும் காவு கொள்ளப்பட்டது உயிர்களே. இது போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த வன்முறைக் கொலைகளை அரசதரப்பில் இருந்தும் போராளிகளின் தரப்பில் இருந்தும் நாங்கள் எங்கள் நாட்டில் வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட வடிவங்களில் சந்தித்துதான் இருக்கின்றோம்.

கருத்துச் சுதந்திரம் பற்றியும் அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பது பற்றியும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பிரச்சனை டென்மார்க்கில் ஒரு பத்திரிகையில் வெளியான கேலிச்சித்திரம். யூலண்ட் போஸ்ட் என்னும் அந்தப் பத்திரிகை இறுதிவரை இஸ்லாமிய அமைப்புக்களிடம் மன்னிப்புக் கேட்காதபடியால் அரபுநாடுகளுக்கான டென்மார்க்கின் பால், பட்டர், சீஸ், இறைச்சி போன்றவற்றின் ஏற்றுமதி முற்றாகப் பாதிக்கப்பட்டது.

இதில் ஏற்பட்ட நட்டம் 100 கோடிகள் இல்லை. இலட்சம் கோடிகள். ஆனால் இறுதிவரை அந்தப் பத்திரிகையோ அல்லது டென்மார்க் அரசாங்கமோ மன்னிப்புக் கேட்கவில்லை. இன்றும் அந்த சித்திரத்தை தீட்டியவரின் உயிருக்கு பிரத்தியோக பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கருத்து சுதந்திரம் என்பது வேறு ஐயா! எங்கள் அரசகடமை என்பது வேறு ஐயா என்ற வகையில் டென்மர்;க் போய்க் கொண்டிருக்கின்றது. இங்கு கருத்து சுதந்திரத்திற்கு இடம் கொடுத்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்பது கோட்பாடு. அங்கு அதை அமுக்கினால்தான் அரசு தப்பிக்கும் என்று நிலைப்பாடு.

இன்று இந்தப் பிரச்சனையில் தலையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் "பாதுகாப்பு வழங்க எங்களிடம் பொலிஸ்படை போதாது… கமலும் முஸ்லீம் அமைப்புகளும் கலந்தாலோசித்து சில காட்சிகளை நீக்கலாம்" என சமரச முயற்சி எடுத்திருக்கிறாரே தவிர ஆணிவேர் பிரச்சனைக்கு தீர்வு காணவேயில்லை.

இனிவரும் காலங்களில் பின்வரும் காட்சிகள் திரைப்படங்களில் வந்தால் 144 தடைச்சட்டத்தின்படி படங்கள் ஓடாது நிறுத்தப்படலாம். 1. இந்திய வீதிகளில் பிச்சைக்காரர்கள்; 2. மக்களைத் துன்புறுத்தம் பொலிஸ்காரர்கள் 3. பொய் பேசும் அரசியல்வாதிகள்… இந்த வரிசையில் 100 காட்சிகளை வரிசைப்படுத்திலாம். அதற்கான 1000 காரணங்களைச் சொல்லலாம். எனவே இனிவரும் காலங்களில் பத்திப்படங்களுக்கு ரொம்ப மௌசு கிடைக்கலாம். என்ன வித்தியாசம்?… உதட்டோர முத்தக்காட்சிகளை பக்திப்படங்களில் காட்ட முடியாது.

அன்புடன் வி. ஜீவகுமாரன்

இராசி பலன்கள் : பெப்ரவரி 1ந் திகதி முதல் 15 திகதி வரை

Posted: 03 Feb 2013 10:03 AM PST


2013 பெப்ரவரி 1ந் திகதி முதல் 15ந் திகதி வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியாவின் வாசகர்களுக்காக,
கிரகநிலைகளை ஆராய்ந்து இப்பலன்களை எழுதியிருப்பவர், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில் கிராமம் பரம்பரை ஜோதிடர்;  பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com

மேட ராசி: (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதலாம் பாதம்) வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக  இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும்.

வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம்.

நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் முருகனை வழிபடவும்.

இடப ராசி: (கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 நட்சத்திர பாதங்கள்)
எதை பேசினாலும் அவமானம், எதை செய்தாலும் தலைகுனிவு என இருந்தீர்களே? அந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். நல்லது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம்.

வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் வழிபாடு செய்யவும்

மிதுன ராசி: (மிருகசீரிடம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் நட்சத்திர பாதங்கள்)
மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள். நல்லது. தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும்.

இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள்.

நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள்.

எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

பரிகாரம்: புதன்தோறும் பெருமாள் ஆலயம் சென்று வரவும்.

கடக ராசி: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும்.

ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் மிகுந்த எச்சரிக்கை தேவை. தீ, டூவீலர் ஆகியவற்றிலும் கவனம் தேவை.

கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது. தந்தையாருடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம். முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.
பரிகாரம்: திங்கள்தோறும் அம்மன் வழிபாடு செய்யவும்.

சிங்க ராசி: ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் )
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம்.

குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். தைரியம் பிரகாசிக்கும் காலமிது. ஆனாலும் அசட்டுத்தைரியம் வேண்டாமே. தாயார் தாய்வழி உறவினர்களுடன் உறவுகள் மேலோங்கும்.

வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் யோகம் கூடி வரும் காலமிது. மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால் சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்து செய்யவும். பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள்.

உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. தந்தையாருடன் நல்ல உறவு நீடிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் சிவனுக்குப் பாலபிஷேகம் செய்யவும்.

கன்னி ராசி: (உத்திரம் 2 3 4ம் பாதங்கள், அத்தம், சித்திரை 1,2 ம் நட்சத்திர பாதங்கள்)
மிகுந்த பொருட்செலவில் சுபவிரையங்கள், எடுத்த காரியங்களில் தடை, எதுவுமே நேர்மாறாக இருப்பது என கடந்த காலங்களை மிகுந்த சிரமத்துடன் கழித்தீர்களல்லவா, இனி வரும்காலம் மிகவும் நல்லகாலம். உங்கள் பேச்சை நீங்களே கேட்காமல் இருந்து வந்த நிலைமை மாறும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம். தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும்.

வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும். படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. அவமானம் ஏற்படலாம். குழந்தைகளின் மீது சின்ன சின்ன பாரங்களை சுமத்தாதீர்கள். அவர்களுடன் உட்கர்ந்துபேசி முடிவு செய்யுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

பரிகாரம்: சனிதோறும் பெருமாளுக்கு துளசி தளம் சமர்ப்பிக்கவும்.

துலா ராசி : ( சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் நட்சத்திர பாதங்கள்)
முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை.

வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும்.

வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் எலுமிச்சைவிளக்கு போட்டு அம்மனை வழிபடவும்.

 விருச்சிக ராசி: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. நல்லது. எந்த இடத்திற்கு சென்றாலம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.

செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளைய சகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தாண பாக்கியம் கிட்டும் காலமிது. தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம்.

கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது.

பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை.சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.

பரிகாரம்: செவ்வாய்தோறும் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வரவும்.
 தனுசு ராசி: ( மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் )
இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம், என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும்.

வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும்.

பரிகாரம்: வியாழன்தோறும் ஸ்ரீகுருபகவானுக்கு நாட்டு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.

மகரம் : ( உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,ம் நட்சத்திர பாதங்கள்)
இதுவரை பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும். நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே, இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள். கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும். இதுவரை இருந்த வந்த உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும்.

வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

சிறியவர்களிடம் கூட கெட்ட பெயர் வாங்கினீர்களே? இனி அந்த நிலைமை மாறும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக யாருக்கும் உதவி செய்தல் கூடாது. உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்யலாம். ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்தல் நலம் பயக்கும். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை.

வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். த்ந்தாயாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது.

மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள்.அடுத்தவருக்கு சொல்லும் யோசனையை நீங்களும் கொஞ்சம் பயன்படுத்தி பாருங்களேன். அதீத கற்பனை கூடாது. அப்படியே கற்பனை செய்தாலும் மற்றவரிடம் சொல்லி மற்றவரை குழப்ப முயற்சிக்காதீர்கள். கலைஞர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும் காலம் இது.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காக்கைக்கு சாதம் வைத்து வழிபட்டு வரவும்.

 கும்ப ராசி : (அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2.3 ம் பாதங்கள்)
எதிலும் ஏமாற்றம், பங்கு தாரர்களுடன் மனக்கசப்பு, வேலை செய்யும் இடத்தினில் கூடுதல் வேலைப்பளு என மிகப்பெரிய சவாலை சமாளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது.

செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும். எதிலும் தெய்வத்தை நம்பும் நீங்கள் உங்களுக்கு தெய்வம் உதவி செய்வதை மறந்து விடாதீர்கள். தைரியமாக எதையும் எதிர் கொள்ள தயாராகுங்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும் காலமிது.

படிப்பு, வாகனம் ஆகியவற்றில் லாபம் உண்டு. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம். தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம்.

நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். தூங்கப்போகும் முன், எங்கும் பயணிக்கும் முன் முன்னோர்கள் வழிபாடு முக்கியம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வரவும்.
மீன ராசி: ( பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)
தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்கலை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும்.

அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான், அதற்காக எப்போதுமே நண்பர்கள்தான? ஆனால் ஒன்று நட்புக்காக உயிரையே கொடுக்கும் தியாகசுடர் நீங்கள். நல்லது. தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள்.

வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம்.

வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்.

வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. நல்லதூக்கம், சாப்பாடு என வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகங்களை தினமும் வழிபடவும்.

பொட்டை போட்டுத்தள்ளியது யாரு?

Posted: 03 Feb 2013 10:01 AM PST


மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகை என வர்ணிக்கப்பட்ட பொட்டு சுரேஷ், நேற்றிரவு 8 மணிக்கு வீதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். காரில் இருந்து வெளியே ஓட முயன்ற பொட்டு சுரேஷை, இழுத்துப் போட்டு வெட்டி, ரத்த வெள்ளத்தில் சாய்த்தது, 6 பேர் அடங்கிய ஒரு குழு.

கொலை செய்தவர்கள் அனைவரும், மின்னலென தப்பிச் சென்றனர். அதன்பின் வந்தது, போலீஸ். மதுரை சத்யசாய் நகர் துரைச்சாமி ரோட்டைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். 50 வயதான இவரது நிஜப் பெயர், சுரேஷ்பாபு. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர். மு.க.அழகிரி இல்லமும், சத்யசாய் நகரிலேயே உள்ளது. நேற்றிரவு 7.40 மணியளவில் தனது Tண்59ஆ6789 எண்ணுடைய காரில் சத்யசாய் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். டிரைவர் மணி என்கிற மாணிக்கம் காரை ஓட்டினார். கடந்த சில தினங்களாகவே, வீட்டுக்கு வரும் பாதையை பொட்டு சுரேஷ் அடிக்கடி மாற்றினார் என்று கூறப்படுகிறது. தனக்கு ஏதோ ஆபத்து உள்ளது என அவர் தெரிந்து கொண்டிருக்கலாம்.

சத்யசாய் நகர் மெயின் ரோட்டில் இருந்து முருகன் குறுக்குத்தெரு சந்திப்பில் பொட்டு சுரேஷின் கார் வந்துகொண்டு இருந்தது. வீதியில் பெரிதாக நடமாட்டம் இல்லை. எதிரே டூவீலரில் 2 பேர் வந்துகொண்டு இருந்தனர். அதை செலுத்தியவர், போதையில் வருவதுபோல வெட்டிவெட்டி ஓடி, சுரேஷின் கார் மீது மோத முயற்சித்தனர். டிரைவர் டூவீலரில் மோதாமல் இருப்பதற்காக காரை நிறுத்தினார். பொட்டு சுரேஷ் கார் கதவை திறந்துகொண்டு இறங்க வெளியே கால் வைத்தார். அந்த நேரத்தில், இவரது காரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த 'டாட்டா ஏஸ்' லோடு வேன், காருக்கு பின்னே சடன் பிரேக் அடித்து நிறுத்தப்பட்டது. அதில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் குதித்தது.

இவர்கள் அனைவரும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு இருந்தனர். குதித்தபோது, அவர்களது கைகளில் கத்தி, அருவா போன்ற ஆயுதங்கள் இருந்தன. இவர்கள் பொட்டு சுரேஷின் காரை நோக்கி ஓடி வந்தனர். எதிரே டூவீலரில் இருந்த இருவரை பார்த்து திட்டி சத்தம் போட்டபடி கீழே இறங்கிய பொட்டு சுரேஷை இவர்கள் பின்புறமாக வந்து பிடித்துக் கொண்டனர். அதன்பின்னர்தான் தாம் சிக்கிக் கொண்டதை கவனித்த பொட்டு, அவர்களை தள்ளிவிட்டு வீதியில் ஓட முயன்றார் …. உடனே, லோடு வேனில் வந்த மர்மக் கும்பலில் இருந்தவர்கள் பொட்டு சுரேஷை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டினர். ஒருவர் பொட்டுவை பிடித்து கீழே தள்ள, அவர் தரையில் வீழ்ந்தார். அப்போதும் உயிருடன் இருந்த அவரை மீண்டும் மீண்டும் குத்தி போட்டுத் தள்ளினர்.

சுமார் 20 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளதாக தெரியவருகிறது. பெரும்பாலான காயங்கள் உடலின் பின் பகுதியிலேயே உள்ளன. சம்பவ இடத்திலேயே பொட்டு சுரேஷ் பரிதாபமாக இறந்தார். உடனே டூவீலரில் வந்தவர்களும், லோடு வேனில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பினர். அதன்பின் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விரைந்து வந்தனர். துணை கமிஷனர் திருநாவுக்கரசு, நேரில் வந்து விசாரணை நடத்தினர். பொட்டு சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர் மீனாட்சி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். மோப்ப நாய் "அழகர்" கொலை நடந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. அழகர், சம்பவ இடத்திலிருந்து டி.வி.எஸ். நகர் ரயில்வே கேட் வரை ஓடி நின்று விட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பொட்டுவை போட்டுத் தள்ளியவர்கள், பார்ப்பதற்கு கட்டுமான பணியாளர்கள் போன்ற தோற்றத்தில் இருந்ததாக கூறுகின்றனர். மதுரை சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது கைதேர்ந்த குழு ஒன்றின் வேலை என்றார். முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, கச்சிதமாக செய்து முடிக்கப்பட்ட கொலை என்றும் சொல்கிறார் அவர். 2006 – 2011 காலப் பகுதியில் மதுரையில் அழகிரி சக்கரவர்த்தி என்றால், பொட்டு சுரேஷ் குறுநில மன்னர். ஆட்சி மாறியபின், 2011-ம் ஆண்டு ஜூலையில், நில அபகரிப்பு, மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அவரது வீடு, பார்ட்னராக உள்ள நிறுவனங்கள் ரெயிடு செய்யப்பட்டன. குண்டர் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன்பின், கைதான மற்றைய அனைத்து தி.மு.க.-வினர் போலவே, இவரும் பெயிலில் வெளியே வந்துவிட்டார். இப்போது, கொல்லப்பட்டும் விட்டார்.

மு.க. அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ், அழகிரி வீட்டுக்கு அருகிலேயே கொல்லப்பட்டார். இந்த கொலை நடந்தபோது, அழகிரி, வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. பொட்டு கொல்லப்பட்டதையடுத்து, மதுரையில் பதட்ட நிலை காணப்படுகிறது. ஏராளமான எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் புலனாய்வு தொடங்கிவிட்டது.

Bhairavi - Sun TV Serial 03-02-13 | Bairavi Sun Tv Serial 03-02-2013 | Bairavi Serial 03-02-2013 | Sun Tv Serial | Sun Tv Bairavi | Tamil Serial | Sun Tv Bairavi Serial | Bairavi Serial 03.02.2013

Posted: 03 Feb 2013 10:04 AM PST






Bhairavi Sun TV | Bairavi Sun Tv Serial 03-02-2013 | Bairavi Serial 03-02-2013 | Sun Tv Serial | Sun Tv Bairavi | Tamil Serial | Sun Tv Bairavi Serial | Bairavi Serial 03.13.2013.
Watch Bairavi 03-02-2013 - Bhairavi Sun Tv, bairavi, bhairavi, sun tv serial, tamil serial, tamil tv, Bairavi 2013, Bairavi, Bairavi Serial, Bairavi tv serial, Bairavi Sun Tv Serial, Sun Tv Bairavi, Bairavi Live, Bairavi online, Sun tv Bairavi online, Bairavi at techsatish, Bairavi Serial Watch Online Bhairavi - Serial CAST: Urvasi, V.S.Raghavan, Varalakshmi and Others.

Santhipoma – Interview of Kadal Hero, Gautham & Kadal Heroine, Thulasi

Posted: 03 Feb 2013 09:47 AM PST


Santhipoma – Interview of Kadal Hero, Gautham & Kadal Heroine, Thulasi

Singer Nithyasri Interview – TVI Canada

Posted: 03 Feb 2013 09:46 AM PST

Kit Kat Dancing Babies New TVC India

Posted: 03 Feb 2013 09:44 AM PST

Sun Tv Nijam – 03-02-2013 | Nijam Sun Tv Show

Posted: 03 Feb 2013 09:43 AM PST

Vaniga Seithigal 03-02-2013 - Sun tv Trade news

Posted: 03 Feb 2013 09:42 AM PST

U.S. military suicide rate surges BY. K.S. THURAI

Posted: 03 Feb 2013 09:39 AM PST

New Extreme Sport: Trampoline Wall

Posted: 03 Feb 2013 09:38 AM PST

Man Attempts to Force Fiancé to Swallow Ring

Posted: 03 Feb 2013 09:33 AM PST



காதலியின் வாயில் மோதிரத்தை போட்ட காதலன்: சுவாரஸ்யமான காதல் சண்டை

அமெரிக்காவில் தன்னை விட்டுவிட்டுப் போக முயன்ற காதலியின் வாயில் நிச்சயதார்த்த மோதிரத்தை வலுக்காட்டயமாக போட்டு விழுங்கச் செய்ய வற்புறுத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரைச் சேர்ந்தவர் பாரன் தாம்ப்சன்(29) என்பவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். ஒரு வயதில் குழந்தை கூட உள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்ட நிலையில் திடீரென திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்தார் பாரனின் காதலி. இதனால் கோபமடைந்தார் பாரன். காதலியுடன் சண்டைக்குப் போனார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அப்போது தனது விரலில் மாட்டியிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து கழற்றி வைத்தார் காதலி. அதைப் பார்த்து கோபமடைந்த பாரன், மோதிரத்தை எடுத்து காதலியின் வாயில் போட்டார். கட்டாயப்படுத்தி முழுங்குமாறு கூறினார்.

ஆனால் வாயை இறுக முடிக்கொண்டார் காதலி. இதில் அவருக்கு மூச்சு முட்டியது. பின்னர் ஒரு வழியாக அவரிடமிருந்து மீண்டு, தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு தப்பி ஓடி வந்தார்.

அருகில் உள்ள வால்மார்ட் கடைக்குப் போன அவர் அங்கிருந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். உடனே பொலிசார் பாரனைக் கைது செய்தனர்.