techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


Unbelievable Little Kid Does a Trick Shot Video

Posted: 11 Feb 2013 10:53 AM PST


Amazing shots from a kid (Titus) between 18 and 24 months old. He began shooting baskets shortly after learning to walk, we started filming some, and then got totally carried away.

This is the trick shot video that makes other trick shot videos look like a bunch of old guys who should have something better to do -- like retire, turn up their pacemakers, or join an assisted living

World News Today 11-02-2013 | World Today 11-02-13 | World News 08-02-2013 | World News Today 11-02-2013 | Polimer Tv News - 11-02-13 | Ulagil Indru - Polimer News

Posted: 11 Feb 2013 10:54 AM PST



World News Today 11-02-2013 | World Today 11-02-13 | World News 08-02-2013 | World News Today 11-02-2013 | Polimer Tv News - 11-02-13 | Ulagil Indru - Polimer News

Yuttha Medai Heats 1

Posted: 11 Feb 2013 10:52 AM PST


Yuttha Medai Heats 1
9 groups will compete in the first tier of the challenge and only 6 pairs will be selected to compete in the second tier of this Heats Stage. From here only 4 pairs will be selected to the Semi Final round.

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !!

Posted: 11 Feb 2013 10:55 AM PST


நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !


ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !


மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.

பிரபாகரன் இல்லை !


"பிரபாகரன் இல்லை.. இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம் வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !


செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன. அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.

Sun TV Cinema Seithigal 11-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

Posted: 11 Feb 2013 10:50 AM PST


Sun TV Cinema Seithigal 11-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

விஸ்வரூபம் படப்பிடிப்பு ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? எங்கே நிஜமாக படம் பிடித்தார்கள்?

Posted: 11 Feb 2013 10:43 AM PST


விஸ்வரூபம் படம் பல தடைகளையும் தாண்டி தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி, உத்தரவாதமான வெற்றிப்படம் என்ற பெயரையும் பெற்றுவிட்டது. சர்ச்சைகளையும் கடந்து, விஸ்வரூபம் படத்தின் 'மேக்கிங்' மெச்சப்படுகிறது. படத்தின் சவுன்ட் ட்ராக் தமிழ் பேசாவிட்டால், உலக தரத்தில் ஒரு ஆங்கிலப்படம் என்றே சொல்லிவிடலாம் என்ற விமர்சனங்களும் உள்ளன.

படத்தின் கதை, ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலுமாக மாறிமாறி நடக்கிறது. விமர்சனங்களில் "ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகள் சூப்பர், அமெரிக்க காட்சிகள் அட்டகாசம்" என்றெல்லாம் எழுதப்படுகின்றன.

எத்தனை பேருக்கு தெரியும், படத்தின் ஒரு பிரேம்கூட ஆப்கானிஸ்தானில் படமாக்கப்படவில்லை என்பது?

எத்தனை பேருக்கு தெரியும், நியூயார்க் என்று படத்தில் காட்டப்படும் அனைத்துக் காட்சிகளும் நியூயார்க்கில் எடுக்கப்படவில்லை என்பது?
அதேபோல, எத்தனை பேருக்கு தெரியும், படத்தில் வரும் அமெரிக்க ராணுவத்தினர் பலர் அமெரிக்கர்கள் அல்ல என்பது?

அதுதான் சினிமா!

ஏப்ரல் மாதம், 20-ம் தேதி, 2011-ம் ஆண்டு, விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு, நியூயார்க்கில் தொடங்குவதாக ஏற்பாடு. துணை நடிகர்கள், ஷூட்டிங் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நியூயார்க்கில் எல்லாம் தயார் நிலையில் இருநதன. ஆனால், அன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.

காரணம், விஸ்வரூபம் படப்பிடிப்பு டீமில் உள்ள சிலருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.

உடனடியாக, புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தார் கமல்ஹாசன்.

படத்தில் நியூயார்க்கில் நடப்பது போல காண்பிக்கப்படும் சில காட்சிகளில், நியூயார்க் லேன்ட்மார்க்குகள் வரும் காட்சிகள் மட்டுமே அங்கே எடுக்கப்பட வேண்டும். மற்றைய காட்சிகள் நியூயார்க் நகரில்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. ஏதாவது ஒரு வட அமெரிக்க நகரத்தில் எடுக்கப்படலாம்.

இதையடுத்து விஸ்வரூபம் டீம், தமது முதல் கட்ட படப்பிடிப்பை மூவ் பண்ணிய நாடு கனடா! 2011-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நியூயார்க்கில் நடப்பதான சில காட்சிகள் கனடாவில் படம்பிடிக்கப்பட்டன. சில கனேடிய தமிழர்கள், இந்தக் காட்சிகளை சுலபமாக கண்டுபிடிப்பார்கள். …

அதேபோலத்தான் ஆப்கானிஸ்தான் காட்சிகளும். விஸ்வரூபம் டீமுக்கு ஆப்கானிஸ்தானில் படமாக்கும் யோசனையே வேண்டாம் என ஐடியா கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அது மிகவும் அபாயமான விவகாரம். ஆப்கானில் நடப்பதாக காண்பிக்கப்பட்ட காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன தெரியுமா?

ஜோர்தான் நாட்டில்!

2011-ம் ஆண்டு நவம்பரில் விஸ்வரூபம் படப்பிடிப்பு டீம், அமான் நாட்டுக்கு ஷிஃப்ட் ஆகியது.

ஜோர்தான் தலைநகர் அமான் முதல் ஸ்டாப். அங்கே சில காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ரியல் ஆப்கான் அட்மோஸ்ஃபியர் இங்கில்லை. அதையடுத்து அல்-பெத்ரா என்ற இடத்தில் ஆப்கான் போன்ற இடங்கள் இருப்பது தெரிய வந்தது. "A rose-red city half as old as time" என்று புகழ்பெற்ற நகரம் இது.

இங்குதான், ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதான பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் அமெரிக்க ராணுவத்தினராக காண்பிக்கப்படும் ஆட்கள், ரஷ்யா, ஈரான் மற்றும் ஆபிரிக்கர்கள்.

அதன்பின், அமெரிக்க விசா கிடைத்தது. 2011-ம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா சென்ற படப்பிடிப்பு குழு, நியூயார்க்கில் நடைபெறுவதான மீதிக் காட்சிகளை படமாக்கியது.

அமெரிக்காவிலும், நியூயார்க்கில் நடைபெறுவதாக காட்டப்படும் அனைத்து காட்சிகளும், நியூயார்க்கில் படமாக்கப்படவில்லை. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிரான்ட் ராப்பிட்ஸ் நகரிலும், படத்தில் நியூயார்க்கில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு, 2011-ம் ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறை காலத்தில் நடைபெற்றது.

ஆனால், படத்தில் பார்க்கும்போது, இந்த வித்தியாசங்கள் எதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். அநேக ஹாலிவூட் படங்கள்கூட, அமெரிக்காவில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகளை இப்போதெல்லாம் கனடாவில்தான் படமாக்குகிறார்கள்!

“விஸ்வரூபம் போல இனி எந்த படத்தையும் தமிழக அரசு தடை செய்ய முடியாது”

Posted: 11 Feb 2013 10:41 AM PST


"தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்த செயல் துரதிருஷ்டவசமானது. இதேபோல் ஒவ்வொரு படத்திற்கும் தடை விதித்தால், ஒவ்வொரு பட தயாரிப்பாளர்களும், மத தலைவர்களை அழைத்து படத்தை காட்டிவிட்டுதான் வெளியிடவேண்டிய நிலை வரும்" என மத்திய அரசு, தமிழக அரசுக்கு குட்டு வைத்துள்ளது.

விஸ்வரூபம் விவகாரத்தில் தமிழக அரசு நடந்துகொண்ட முறையை மத்திய அரசு லேசில் விட்டுவிடுவதாக இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் மணிஷ் திவாரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "தமிழகத்தில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் துரதிருஷ்டவசமானது. மத்திய தணிக்கை குழு படத்தை பார்த்து திரையிடலாம் என்று ஒப்புதல் கொடுத்த பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது.

இதேபோல் ஒவ்வொரு படத்திற்கும் தடை விதித்தால், ஒவ்வொரு பட தயாரிப்பாளர்களும், மத தலைவர்களை அழைத்து படத்தை காட்டிவிட்டுதான் வெளியிடவேண்டிய நிலை வரும்.

எனவே, 1956-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒளிப்பதிவு சட்டம் மற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகும்போது திரைப்படங்களை மாநில அரசுகள் தடை செய்ய முடியது.

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு உரிய அனுமதி வழங்காமல் மத்திய அரசு தடை விதித்துவிட்டது என்று தமிழக அரசு கூறுவது தவறானது. அரசின் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லைசன்சை ரத்து செய்யவும் இல்லை, கைவிடவும் இல்லை. லைசென்ஸ் விவகாரம் நிலைகுழுவின் ஆய்வில் உள்ளது. நிலைக்குழு தான் இது குறித்து முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் முன் புதிய சட்டம் வந்துவிடும் போலிருக்கிறதே! (ஆனால், விஸ்வரூபத்தின் வெற்றியின் பின்னணியில் உள்ள காரணங்களில், இஸ்லாமிய அமைப்புகளும், தமிழக அரசின் தடையும் ஒரு காரணம்தான்)

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

Posted: 11 Feb 2013 10:39 AM PST


மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும். நான் சொல்லக்கூடிய பெரும்பாலான வைத்தியம் எனக்கு நானே செஞ்சு பார்த்துட்டு அதுக்கு அப்புறமாதான் மத்தவங்களுக்கு சொல்லுவேன்.

சில நோய்கள்... தெரிஞ்சவங்களுக்கு வந்து செஞ்சு பார்த்துட்டு சொல்லிட்டு இருக்கேன். சமீபத்துல எனக்கு கழுத்து வலி வந்தது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் பின்னோக்கி போவோமா?

பத்து, பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி கழுத்து வலி வந்திச்சி. தெரிஞ்ச டாக்டர்கிட்ட போய் பார்த்தேன். கழுத்து எலும்பு தேஞ்சிருக்கு. சில எக்சசைஸ் பண்ணினா சரியாயிடும்னு சொன்னார். எலும்பு தேயுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய வேலை பார்க்கல.

ஆனா அடுத்து வந்த நாட்கள்ல இதே கழுத்து வலி வந்திச்சி. அதை இப்போ புரிஞ்சிகிட்டேன். தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.

அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.

காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.

ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம் என்கிறார் மூலிகை வைத்தியர் தமிழ்குமரன் (9551486617)

விஸ்வரூபம் - முடிந்ததா நாடகம்...?

Posted: 11 Feb 2013 10:31 AM PST


விஸ்வரூபம் படப் பிரச்சனையை முதலில் இருந்து பட்டியலிட்டு உங்களை மூர்ச்சையாக்கும் விருப்பமில்லை. ஒரேயொரு விஷயம்....

தமிழகம் தவிர மற்ற இடங்களில் படம் வெளியான பிறகும் இஸ்லாமிய அமைப்புகள் படத்தை தமிழகத்தில் திரையிட எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? சில பிரச்சனைக்குரிய காட்சிகள். அவை என்ன?

1. கழுத்தை அறுக்கும் காட்சி

2. இஸ்லாமிய சிறுவன் கண்ணைக் கட்டிக் கொண்டு துப்பாக்கியின் ரகத்தை சொல்லும் இடம்

3. பொது இடத்தில் தூக்கில் போடும் காட்சி

4. குண்டு வெடிப்பதற்கு முன் தீவிரவாதி தொழுகை நடத்தும் காட்சி

5. சிறுவர்கள் கையை துப்பாக்கியாக்கி சுட்டு விளையாடும் இடம்

... இதுபோல் மேலும் சில பகுதிகள்.

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு கமல் பிரச்சனைக்குரிய 7 இடங்களை எடிட் செய்யவும், சில இடங்களை மியூட் செய்யவும் ஒப்புக் கொண்டதாக போராட்டம் நடத்திய இஸ்லாமிய தலைவர்கள் கூறினர்.

ஆனால் அப்போதே, எந்தக் காட்சியையும் வெட்ட வில்லை, சில இடங்களை மியூட் செய்ய மட்டுமே செய்துள்ளோம் என பேஸ்புக்கில் கமல்ஹாசன் அறிவித்தார். அவர் சொன்னது போல் இஸ்லாமிய அமைப்புகள் நீக்க வேண்டும் என்று சொன்ன எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை. கழுத்தை அறுப்பது, துப்பாக்கி ரகத்தை செல்வது, தொழுகை, பொது இடத்தில் தூக்கு என அனைத்துக் காட்சிகளும் விஸ்வரூபத்தில் இடம் பெற்றிருக்கின்றன. குரான் ஓதும் சில இடங்கள், தீவிரவாதி தான் தமிழகத்தில் பதுங்கியிருந்ததாக கூறும் இடம் என சில பகுதிகளின் வசனங்கள் மட்டும் மியூட் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாமிய தலைவர்களுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து காட்சிகளுடன்தான் விஸ்வரூபம் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என தெரியும். எனில்,

எதற்கு அத்தனை ஆர்ப்பாட்டமும், கல்லெறி போராட்டமும்?

யாருடைய விருப்பத்துக்காக இல்லை லாபத்துக்காக இந்த போராட்டம்? சாதாரணமாக வந்து போயிருக்க வேண்டிய ஒரு படம் இன்று சக்கைப்போடு போடுவதற்கு துணை நின்றவர்கள் யார்? முக்கியமாக இந்த நாடகத்தின் பகடைக் காய்கள் யார்?

அரசியல்வாதிகளா, கமலா, இஸ்லாமிய அமைப்புகளா, அரசியல் சாயமற்ற சாதாரண இஸ்லாமியர்களா, மீடியாக்களா இல்லை தமிழக மக்களா?

Sunday Galatta HD VIDEO 10th February 2013

Posted: 11 Feb 2013 10:02 AM PST

Sollunganne Sollunga | Koyambedu Bus Stand

Posted: 11 Feb 2013 10:00 AM PST

Sun Singer Episode 3 - HD VIDEO - SUN TV SHOW

Posted: 11 Feb 2013 09:58 AM PST

Super Kudumbam Episode 25 - HD VIDEO - SUN TV

Posted: 11 Feb 2013 09:57 AM PST

Kutty Chutties Episode 16 - HD VIDEO - Sun Tv

Posted: 11 Feb 2013 09:55 AM PST

Chinna Sandhippu with Manasa - Serial Actress Suriya Vanakkam

Posted: 11 Feb 2013 09:47 AM PST

Kana Kanum Kalangal Kalloori Salai 11-02-13 | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 11-02-13 | Vijay Tv Serial 11th February 2013 | Kana Kanne | Kana Kanum Kalangal Kalloori Salai 11-02-13 Watch Online Kana Kanum Kalangal Kalloori Salai

Posted: 11 Feb 2013 09:47 AM PST






Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 11-02-13 ,Vijay Tv Kana Kanum Kalangal 11-02-13,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 11th February 2013,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 11-02-13 ,Kana Kanum Kalangal 11-02-13,Kana Kanum Kalangal Kalloori Salai 11th February2013,
Kana Kanum Kalangal Kalloori Salai New Serial Vijaytv, Kana Kanum Kalangal Kalloori Salai Promo, Kana Kanum Kalangal Kalloori Salai Promo Video, Kana Kanum Kalangal Kalloori Salai Serial,kana kaanum kalangal 11-02-2013 Video | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 11-02-13 This Week Promo Video | Vijay tv Serial 11thFebruary2013

Oru Porambokku Full Song Video – Kedi Billa Killadi Ranga

Posted: 11 Feb 2013 09:45 AM PST


Watch Oru Porambokku Making Video from Kedi Billa Killadi Ranga feat. STR, Yuvanshankar Raja

Singer : STR, Yuvanshankar Raja
Lyrics – Na.Muthukumar
Music by : Yuvanshankar Raja
Starring : Vimal, Sivakarthikeyan, Bindu Madhavi, Regina Cassandra
Directed by : Pandiraj
Produced by : P. Madan, Pandiraj
Banner : Pasanga Productions, Escape Artists Motion Pictures
Distributed by: Studio Green

Digital Partner — Shotformat
Wap Partner –Techzone

Watch Nagarpuram Tamil Movie Online – Jukebox (Full Songs)

Posted: 11 Feb 2013 09:43 AM PST


Nagarpuram story revolves around the lives of the two brothers, the complications that they face everyday, their romantic ventures and so on.

Cast: Akhil, Sri Divya
Music Director: Aruldev
Director: N.P Sarathy
Producer: D Arumugam
Banner: G.D Films

Chennai Times 11-02-2013 Sun Music Special Show

Posted: 11 Feb 2013 09:41 AM PST

காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: திரிபுராவில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

Posted: 11 Feb 2013 09:40 AM PST



குமார்கட்(திரிபுரா), பிப். 11-

திரிபுராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்றத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுத்து இணைந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எனவே, அவர்களால் நல்ல ஆட்சியை வழங்க முடியாது.

வங்கதேச ஊடுருவல்காரர்கள் மேற்கு வங்கம் மற்றும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் நுழைந்து வருகின்றனர். ஆனால், காங்கிரசோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ ஊடுருவலை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரு கட்சிகளும் பொதுமக்களின் பிரச்சினையில் தீவிரம் காட்டுவதில்லை. சத்தீஸ்கர், கர்நாடகா போன்ற பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், திரிபுராவில் அந்த வசதி இல்லை.

இதனால், இங்கு வளர்ச்சி இல்லை. நல்லாட்சி அமையவும், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கிடைக்கவும் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்கவும் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

60 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா 50 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Prashanth & Naan E Director to join ??

Posted: 11 Feb 2013 09:38 AM PST

மேற்கு வங்க எல்லையில் வங்கதேச படை துப்பாக்கி சூடு: இந்திய விவசாயி பலி

Posted: 11 Feb 2013 09:36 AM PST




கொல்கத்தா, பிப். 11-

மேற்கு வங்க மாநில எல்லையில் இன்று வங்கதேச படையினர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். எல்லைப்பகுதியில் உள்ள மகராத் கிராமத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில், முகமது அப்துல் பரீத் என்ற விவசாயி இறந்தார். 12 வயது குழந்தை கண்ணில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தது.

வங்கதேச படை நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை இந்திய எல்லைப் பாதுபாப்புபடை அதிகாரி சர்மா உறுதி செய்தார். இந்த சம்பவத்தையடுத்து வங்கதேச எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Nothing to do with Kadal’s Loss - Maniratnam

Posted: 11 Feb 2013 09:35 AM PST

120 crores so far. Vishwaroopam’s Box Office

Posted: 11 Feb 2013 09:34 AM PST

Russian road – Expect the Unexpected

Posted: 11 Feb 2013 09:25 AM PST