techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- Helicopter Bribe Important Telephonic Conversation Released
- திருப்பங்கள் தரும் திருப்பராய்த்துறை
- அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி
- இன்றும், நாளையும், நாடு தழுவிய வேலை வேலை நிறுத்தம்
- அன்பிருக்கும் இடத்தில் ஆண்டவன்
- 5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!
- இலங்கை ராணுவம் மறுப்பு
- குளியலறையில் ரகசிய கேமரா : முக்கிய அரசியல் பிரமுகர் கைது
- அந்தோணி சவால் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயார்
- நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் : வயலாரை தொடர்ந்து சரத்யாதவ் வழிசல்
- இந்திய பாட்மின்டன் லீக்: சர்வதேச நட்சத்திரங்கள் விருப்பம்
| Helicopter Bribe Important Telephonic Conversation Released Posted: 19 Feb 2013 06:08 PM PST |
| திருப்பங்கள் தரும் திருப்பராய்த்துறை Posted: 19 Feb 2013 06:02 PM PST ஐம்பூதங்களாய், அகிலத்தின் இயக்கங்களாய் விளங்கி, ஆட்கொண்டருளும் பரமேஸ்வரன் வீற்றிருந்து அருள்புரியும் அரிய தலங்களுள் திருப்பராய்த்து றையும் ஒன்று. இத்தலம் சோழ நன்நாட்டின் காவிரித் தென்கரைத் தலங்களுள் மூன்றாவதாகப் பாடல்பெற்ற திருத்தலமாக போற்றப்படுகின்றது. இத்தலத்தினை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோர் பாடிச் சிறப்பித்துள்ளனர். அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். குடகு மலையில் தொடங்கிய தன் பயணத்தை காவிரித்தாய் அகலமாக்கிக் கொள்ளும் இடம் இந்த பராய்த்துறை. இதனால் அகண்ட காவிரி என பெயர் பெறுகிறது இந்த பொன்னி நதி. இப்பராய்த்துறைக்கு சற்று தூரத்தில் பெருங்கிளையாக கொள்ளிடம் என்று பிரிகிறாள். ஆதியில் தாருகாவனம் எனப் போற்றப்பட்டது இத்தலமே. இந்த தாருகாவனத்தில் வாழ்ந்த 48,000 ரிஷிகளும் தாம் செய்யும் கர்மங்களே (செயல்கள்) நல்ல பலனையும், தீய பலனையும் அளிக்க வல்லதென்றும், இதற்கு இறைவனது துணை தேவையில்லை என்றும் மிகுந்த செருக்குடன் வாழ்ந்து வந்தனர். இவர்களது பத்தினியரும் தம் கற்பின் வலிமையால் எதையும் சாதித்து விடலாம் என்ற ஆணவத்துடன் இருந்தனர். அவர்களது ஆணவத்தினை அழிக்க எண்ணிய பரமேஸ்வரன் பிக்ஷாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருக்கொண்டு முனிவர்களின் தபோநிலையையும், முனி பத்தினியரின் ஆணவத்தையும் குலைத்தனர். இதனால் கோபங்கொண்ட ரிஷிகள் அபிசார வேள்வி (ஏவல் யாகம்) நடத்தி, இறைவனை அழிக்க எண்ணினர். இறைவனை அழிக்க முடியுமா! இறுதியில் வென்றது இறைவனே! பின்னர் 48,000 ரிஷிகளும், சிவபெருமானிடம் ஞானம் பெற்று, தாருகாவன ஈஸ்வரனைப் பூஜித்து முக்தியுற்றனர். பல வகைகளில் மூலிகையாக உதவும் தாருகா மரம், தமிழில் பராய் எனப்படுகிறது. இத்தாருகா மரங்கள் நிறைந்த வனத்தினிடையே உதித்த சுயம்பு லிங்கமாதலால் இத்தல ஈசன் தாருகாவன ஈசன் என்று போற்றப்பட்டார். துலா மாதமென்னும் ஐப்பசி மாத முதல் நாளில் இந்த பராய்த்துறையில் ஸ்நானம் செய்வது மிகுந்த பலன் அளிக்கவல்லது. ஐப்பசி முதல் நாளில் (முதல் முழுக்கு) இந்த பராய்த்துறையிலும் கடைசி நாளில் (கடை முழுக்கு) மயிலாடுதுறையிலும் ஸ்நானம் செய்வதை தொன்று தொட்டு வரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எண்ணற்ற பக்தர்கள். அச்சமயம் பராய்த்துறை ஈசனும் அம்பிகையும் காவிரிக்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது! ஐப்பசி மாதம் முழுவதும் இங்கே நீராடலாம்! அப்போது வரும் புது வெள்ளத்தில் தாதுக்கள் நிறைந்திருக்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்! நமது பாவங்களும் துன்பங்களும் தீர்ந்து புண்ணியம் பெருகும். சாலையை ஒட்டிய மண்டப நுழைவாயில் வழியே உள்ளே செல்ல கல்யாண மண்டபமும், ராமகிருஷ்ண தபோவனமும் எதிரே திருக்குளமும் அமைந் துள்ளன. அடுத்ததாக சிற்ப எழில் கொஞ்சும் அழகிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் 70 அடி உயரத்தில் காட்சியளிக்கிறது. உள்ளே ஒரே மண்டப வளா கத்துடன் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவர் அமைந்திருக்கிறார்கள். இரண்டாம் ராஜகோபுரம் ஐந்து நிலை மாடத்துடன் அழகுறத் திகழ்கிறது. இதனுள் ஓர் பிராகார அமைப்பும், அனேக கோஷ்ட தெய்வங்களும் வீற்ற ருள்கின்றனர். உள்ளமைப்பு மூடுதளமாக அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் செப்பனிடப்பட்ட இவ்வாலயம் மிகுந்த கலைநயத்துடன் திகழ்கிறது. ஸ்வாமி சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. கருவறையில் தாருகாவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தமாக வீற்றிருந்து அருள்மழை பொழிகிறார். அவருக்கு பராய்த்துறைநாதர், செல்வர் ஆகிய திருநாமங்களும் உண்டு. மகா மண்டபத்திலேயே தென்முக சந்நதியுள் நின்ற வண்ணம் வேண்டும் வரங்களை நல்குகின்றாள், அன்னை ஹேமவர்ணாம்பிகை. பசும்பொன்மயிலாம்பிகை, ஹைமவதி ஆகிய திருநாமங்களாலும் அழைக்கப் பெறுகின்றாள். கணபதி, கந்தன், கஜலக்ஷ்மி ஆகியோருக்கும் இங்கே தனித்தனிச் சந்நதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர் தனி மண்டபத்துள் காணப்படுகின்றார். இங் குள்ள தட்சிணாமூர்த்தி வீராசனத் திருக்கோலத்தில் வீற்றருள்கின்றார். மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதில் அர்த்தநாரீஸ்வரர் காணப்படுகின்றார். மேலும், 63 நாயன்மார்களோடு, பஞ்சலிங்க தரிசனமும் காணலாம். இரண்டு பெரிய பிராகாரங்களைக் கொண்டு ஆலயம் பிரமாண்டத்தையும், கலைநயத்தையும் பிரதிபலிக்கின்றது. தல தீர்த்தமாக காவிரி ஆறு ஆலயத்தின் வடபால் பேருந்து சாலைக்கு அப்பால் பாய்கின்றது. தல விருட்சம் தாருகா எனப்படும் தேவதாரு மரமாகும். இதுவே பராய்மரம் எனப்படுகிறது. ஆலய வெளிப்பிராகாரத்தில் இவை நிறைந்து காணப்படுகின்றன. தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் ஆல யம் திறந்திருக்கும். சிவராத்திரி, நவராத்திரி, அன்னாபிஷேகம் ஆகியவற்றோடு வைகாசி மாதம் 10ம் நாள் பிரம்மோற்சவமும் சிறப்புற நடைபெறுகின்றது. அதில் 5ம் நாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 6ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 9ம் நாள் திருத்தேர் உலாவும், 10ம் நாள் விசாக தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.இத்தல ஈசனை வழிபட்டு, பராய் மரப்பட்டையினை மஞ்சளுடன் அரைத்து, தோல் நோய் உள்ளவர்கள் பூசிக் கொண்டால் விரைவில் அந் நோய் நீங் குகிறது. இத்தல வழிபாடு, துன்பங்களை துடைக்கும். தடைகளை விலக்கும். திருப்பங்களை நிகழ்த்தும். இதில் எள்ளளவும் ஐயமில்லை. ஈஸ்வரனே அகில உலகிற்கும் கர்த்தா என்பதை ரிஷிகள் உணர்ந்தது போல், நாமும் அவரை உணர்ந்து அவனருள் பெற்று உய்வடைவோம். -எம்.கணேஷ் |
| அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி Posted: 19 Feb 2013 05:57 PM PST பேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர். மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், "புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார். |
| இன்றும், நாளையும், நாடு தழுவிய வேலை வேலை நிறுத்தம் Posted: 19 Feb 2013 05:51 PM PST புதுடில்லி:மத்திய அரசை கண்டித்து, இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களின் பணிகள், கடுமையாக பாதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், "தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள, இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில், வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்க கூடாது' என, மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை, மத்திய அரசே தன் வசம் வைத்திருக்க வேண்டும்; பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 11 தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன."நாடு முழுவதும், இன்றும், நாளையும், வேலை நிறுத்தம் நடைபெறும்' என, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. கட்சி பாகுபாடு இன்றி, அனைத்து கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும், இதற்கு ஆதரவு அளித்துள்ளதால், வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "இரண்டு நாள் வேலை நிறுத்தத்தால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும்; எனவே, வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்' என, பிரதமர், மன்மோகன் சிங், நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த, அமைச்சர்கள் குழுவையும் அவர் நியமித்தார்.நேற்று முன்தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர்களின் சமரசத்தை, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை. இதனால், இரண்டு நாள் வேலை நிறுத்தம் உறுதியாகியுள்ளது.இந்த வேலை நிறுத்தம் காரணமாக, பல மாநிலங்களில், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம். வாகன போக்குவரத்துகளிலும் சிக்கல் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது."வேலை நிறுத்தம் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்பால், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படலாம்' என, தொழில் வர்த்தக அமைப்புகள் எச்சரித்துள்ளன."இந்த வேலை நிறுத்தத்தில், வங்கி ஊழியர்களும் பங்கேற்பர்' என, வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது, மத்திய அரசை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இல்லாத, இந்த வேலை நிறுத்தத்தில், அவர்கள் பங்கேற்க கூடாது' என, கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கி ஊழியர்களை பொறுத்த அளவில், இந்த வேலை நிறுத்தத்தில், அவர்கள் பங்கேற்க எந்த தேவையும் இல்லை; போராட்ட குழுவினர் வெளியிட்டுள்ள கோரிக்கை அறிவிப்பில், ஒன்று கூட, வங்கிகள் தொடர்பானது அல்ல.வங்கி ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லை; கவர்ச்சிகரமான சம்பளம், போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவை, சட்டத்திற்குஉட்பட்டு வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கூட, பென்ஷன் பெற தகுதி உடையவர்களாக உள்ளனர்.எனவே, தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில், வங்கி ஊழியர்கள் ஈடுபட கூடாது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், "போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, வங்கி ஊழியர் சங்கங்கள் உறுதியாக தெரிவித்துள்ளதால், இரண்டு நாட்களுக்கு வங்கி பணிகள் பாதிப்படையும்; பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.அதேநேரத்தில், இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வேலைக்கு வராத அரசு பணியாளர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரித்துள்ளன. |
| அன்பிருக்கும் இடத்தில் ஆண்டவன் Posted: 19 Feb 2013 05:45 PM PST நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், கடவுள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்று நினைத்து மறைவில் செய்யும் பாவங்களைச் செய்பவர்கள் அவரது கொடிய தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அறிஞனாக இருப்பவன் அறியாதவர்களைக் கண்டு ஏளனம் செய்வது கூடாது. பிறரை மதிப்புக்குறைவாக நினைப்பவன் ஒருநாளும் நல்ல அறிஞனாக இருக்க முடியாது. கடவுளை துன்பம் வந்த போது மட்டும் நினைப்பதும் பின்பு மறந்து விடுவதும் பலரது வழக்கமாக உள்ளது. விடாப்பிடியாக ஒவ்வொரு நாளும் கடவுள் வழிபாடு செய்வதை அன்றாடக் கடமையாக கொள்ளுங்கள். நிச்சயம் அவன் அருளுக்கு பாத்திரமாவீர்கள். தன்னைப் போல பிறரையும் நேசிப்பவனே நல்ல மனிதன். பிறரை வெறுப்பவனை தெய்வமும் வெறுத்து விடும். அன்பிருக்கும் இடத்தில் மட்டுமே ஆண்டவன் குடிகொள்கிறான். மனத்தூய்மை பெற நினைப்பவன் தொண்டு செய்து வாழ்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தொண்டினால் மனம் பக்குவமும், தூய்மையும் பெறுகிறது. |
| 5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்! Posted: 19 Feb 2013 05:43 PM PST ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன. மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன. துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம். 17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர். இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ |
| Posted: 19 Feb 2013 05:39 PM PST லண்டன்:விடுதலை புலி தலைவர் பிரபாகரனின், இளைய மகன், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட படத்தை, பிரிட்டனின், சேனல்-4, "டிவி' வெளியிட்டுள்ளது. ஆனால், "இந்த படம் உண்மையானதல்ல' என, ராணுவம் மறுத்துள்ளது. இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, 25 ஆண்டுகளாக சண்டை நடந்தது. 2009ல், நடந்த இறுதி கட்ட போரில், பிரபாகரனும், அவரது மூத்த மகனும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஏராளமான விடுதலை புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை பற்றி, தகவல் தெரியாமல் இருந்தது. 12 வயதான பாலசந்திரன் குண்டு காயங்களுடன் இறந்து கிடக்கும் படம், சில மாதங்கள் கழித்து வெளியானது.இலங்கையில், சண்டை ஓய்ந்த பிறகு, விடுதலை புலிகளின் சிலரது பாதுகாப்பில், பாலசந்திரன் இருந்துள்ளான். விடுதலை புலிகளுடன், பாலசந்திரனையும் அழைத்து சென்ற, இலங்கை ராணுவத்தினர், அவனை ஒரு கிடங்கில் அடைத்து வைத்துள்ளனர். அவன் பிஸ்கட் சாப்பிடுவது போன்ற படம், பிரிட்டனின் "சேனல்-4' தொலைகாட்சியில் காட்டப்பட்டது. அதே உடையில் இருந்த பாலசந்திரன், சிறிது நேரத்துக்கு பின் சுட்டு கொல்லப்பட்டது போன்ற படமும், இந்த "டிவி'யில் காட்டப்பட்டது. இந்த படம், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறலை வெளிகாட்டியுள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலசந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான பட விவகாரத்தை, இலங்கை அரசு மறுத்துள்ளது. இது குறித்து, இலங்கை ராணுவ அதிகாரி ருவன் வனிகசூரியா கூறியதாவது:சேனல்-4 வெளியிட்டுள்ள படம், உண்மைக்கு புறம்பானது. புரளியை கிளப்பும் நோக்கில், இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் பலத்த சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. அடுத்த மாதம், ஐ.நா., மனித உரிமை கூட்டம் நடைபெற உள்ளது. இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. சானல்-4 வெளியிட்டுள்ள படங்கள் தொடர்பாக, இலங்கையில் நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.இவ்வாறு வனிகசூரியா கூறினார். இலங்கையில், விடுதலை புலிகளுடனான சண்டையின் போது, ஏராளமான போர் குற்றம் நடந்ததாக, ஐ.நா., பார்வையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்."இது தொடர்பாக, இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள, நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை, அந்நாட்டு அரசு செயல்படுத்தவில்லை' என, கடந்த ஆண்டு, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.இதற்கிடையே, இந்த ஆண்டும், இலங்கைக்கு எதிராக, தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இந்த சமயத்தில், பாலசந்திரன் கொல்லப்பட்ட படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இந்த படம், ஜெனிவாவில், அடுத்த மாதம் நடைபெற உள்ள, மனித உரிமை ஆணைய கூட்டத்தில், விவாதிக்கப்படும்' என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
| குளியலறையில் ரகசிய கேமரா : முக்கிய அரசியல் பிரமுகர் கைது Posted: 19 Feb 2013 05:37 PM PST திருவனந்தபுரம் : பக்கத்து வீட்டு குளியலறை வாட்டர் ஹீட்டரில், ரகசிய கேமரா பொருத்தி, குளியலறையில் பதிவாகும் காட்சிகளை, தன் வீட்டிலுள்ள கம்ப்யூட்டரில் பார்த்து வந்த, இந்திய கம்யூனிஸ்ட், முன்னாள் கிளை செயலர் கைது செய்யப்பட்டார். கேரளா, திருவனந்தபுரம், முட்டட மரப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர், ரகுநாத், 44. எலக்ட்ரீஷியன். இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலராகவும், முன்னர் பணியாற்றியுள்ளார். எட்டு மாதங்களுக்கு முன், பக்கத்து வீட்டு குளியலறையில், வாட்டர் ஹீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, யாருக்கும் தெரியாமல், அதனுள் சிறிய ரக கேமராவையும் பொருத்தியுள்ளார். ரேடியோ ஏ.வி., டிரான்ஸ்மீட்டருடன் கூடிய, அந்த சிறிய ரக கேமராவில் பதிவாகும் காட்சிகளை, தன் வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட ரிசீவர் மூலம் பெற்று, பார்த்து வந்துள்ளார். கடந்த, எட்டு மாதங்களாக இதைச் செய்துள்ளார். இவர் வாட்டர் ஹீட்டர் பொருத்திய பக்கத்து வீட்டில், திருமணமான, இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சகோதரிகளான அவர்கள் இருவரின் கணவர்களும், வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். சமீபத்தில், இந்த பெண்களின் வீட்டிற்கு வந்த, அவர்களின் உறவினர் ஒருவருக்கு, குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள, வாட்டர் ஹீட்டர் கருவி மீது, சந்தேகம் வந்தது. இதையடுத்து, வேறொரு நபரை அழைத்து வந்து, அக்கருவியை பரிசோதித்தபோது, அதனுள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, எலக்ட்ரீஷியன் ரகுநாத்தை கைது செய்தனர். அவர் வீட்டிலிருந்த கம்ப்யூட்டர் மற்றும் ரிசீவர்களை, பறிமுதல் செய்தனர். இதேபோல், அப்பகுதியில் வேறு ஏதாவது வீடுகளில், ரகசிய கேமராக்களை, ரகுநாத் பொருத்தியுள்ளாரா என்பது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர். |
| அந்தோணி சவால் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயார் Posted: 19 Feb 2013 05:32 PM PST புதுடில்லி: ""ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் எழுப்பும், எந்த கேள்விக்கும் பதில் அளிக்க, அரசு தயாராக உள்ளது,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார். ராணுவ அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அந்தோணி கூறியதாவது: ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக, மீடியாக்களில் தகவல் வெளியான, முதல் நாளிலிருந்தே, அதற்கு தேவையான நடவடிக்கைகள், மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. சி.பி.ஐ., விசாரணைக்கும், உடனடியாக உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் எழுப்பும், எந்த கேள்விக்கும், பதில் அளிக்க, தயாராக உள்ளோம். எதிர்க்கட்சிகளின் சவால்களை சந்திக்க தயார். எங்கள் கைகள் சுத்தமானவை. ஹெலிகாப்டர் விவகாரத்தில், நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இந்த விஷயத்தில், அனைத்து நடைமுறைகளுமே, சட்ட விதிமுறைப்படியே நடந்துள்ளன. ஹெலிகாப்டர் ஊழலுக்கு பொறுப்பேற்று, அமைச்சர் பதவியை, நான் ராஜினாமா செய்யப் போவதாகவும், தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக, ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரை சந்திப்பதற்கு தயாராகி வரும் நேரத்தில், ஹெலிகாப்டர் விவகாரம், எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித ஆசைக்கு, அளவே இல்லை. ஆசைக்கு அடிமையானவர்கள், உலகம் முழுவதும் உள்ளனர். இந்த விஷயத்தில், மத்திய அமைச்சர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. அமைச்சர்களுக்கு இடையே, எந்த வேறுபாடும் இல்லை. கடந்த ஒரு ஆண்டாக, இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, கடந்த ஒரு வாரமாக, அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படும், குற்றச்சாட்டும் தவறானது. இத்தாலியின்,"பின்மெக்கானிகா' நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மத்திய அரசும், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தாலி சென்றுள்ள, சி.பி.ஐ., குழு, இந்தியா திரும்பியதும், ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து, முடிவு எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கருணை காட்ட மாட்டோம்; சம்பந்தப்பட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்தோணி கூறினார். கமல்நாத், பார்லி., விவகார அமைச்சர் : ஹெலிகாப்டர் ஒப்பந்தம் குறித்த விஷயத்தில், நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இது தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்தப்பட்டால், அதற்கும், நாங்கள் தயார். |
| நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் : வயலாரை தொடர்ந்து சரத்யாதவ் வழிசல் Posted: 19 Feb 2013 05:28 PM PST போபால்: பெண் நிருபர்களை கேலி கிண்டல் செய்வது,அவர்களிடம் அசடு வழிவது என்பது அரசியல் கட்சி தலைவர்களின் சீசன் போலும் இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத்யாதவ். ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக இருப்பவர் சரத்யாதவ் . இவர் மத்தியபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து எம்.பி.,யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் பெண் நிருபர் ஒருவர் சரத்யாதவிடம் நீங்கள் மத்தியபிரதேசம் , பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள், இதில் எந்த மாநிலம் சுமாரானதாக கருதுகிறீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு பதில்அளித்த சரத்யாதவ் ஒட்டுமொத்தமாக இந்தியா அழகாக இருக்கிறது. என்று கூறிய அவர் மேலும் நீங்கள்கூட அழகாகத்தான் இருக்கிறீர்கள் என கிண்டல் செய்தார். தொடரும் அரசியல்வாதிகளின் கிண்டல்: தற்போதுகேரளாவை உலுக்கி வரும் சூரிய நெல்லி சம்பவ பிரச்னையில் பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் வயலார் ரவி அளித்த பதில்களால் நாடு முழுவதும் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் வயலார் ரவி சம்பந்தப்பட்ட நிருபரிடம் மன்னிப்பு கோரினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ளாக ஜனதா தள கட்சி தலைவர் சரத்யாதவ் இதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் பெணகளுக்கு எதிரான பாலியியல் புகார் எழுந்து வரும் நேரத்தில் பொறுப்புள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தற்போதைய சீசன்போலும். பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதங்களில் பங்கேற்கும் சரத்யாதவ் மசோதா குறித்து பல்வேறு கூட்டங்களில் கடுமையாக விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| இந்திய பாட்மின்டன் லீக்: சர்வதேச நட்சத்திரங்கள் விருப்பம் Posted: 19 Feb 2013 05:23 PM PST புதுடில்லி: இந்திய பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில், இந்தோனேஷியா, தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் போல, பாட்மின்டன் போட்டிகளை நடத்த இந்திய பாட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ.,) முடிவு செய்துள்ளது. முதலாவது இந்திய பாட்மின்டன் லீக் தொடரை, வரும் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடத்த உள்ளது. இத்தொடரின் மொத்த பரிசு தொகை சுமார் ரூ. 5.5 கோடி. இதில் செய்னா நேவல், ஜுவாலா கட்டா, திஜு, காஷ்யப் உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன், இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் கொரியா, வியட்னாம், ஐரோப்பிய நாடுகளில் இருந்து முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷிய வீரர் சோனி டிவி குன்கொர÷õ, டென்மார்க் வீராங்கனை டின் பான், ஜெர்மனி வீராங்கனை ஜூலியன் சென்க், சீனதைபேயின் டை டிஜு இங் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய நட்சத்திரங்களுடன், சர்வதேச நட்சத்திரங்கள் இணைவதால், இத்தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













