techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


Kollywood Diaries - Kamal Haasan - Sun Music 02-01-2013 | Kollywood Diaries Interview With Actor Kamal | Sun Music Kollywood Diaries Kamal Promo | Sun Music Interview With Actor Kamal

Posted: 01 Feb 2013 11:04 AM PST


Kollywood Diaries - Kamal Haasan - Sun Music 02-01-2013 | Kollywood Diaries Interview With Actor Kamal | Sun Music Kollywood Diaries 02nd february 2013 Kamal Promo | Sun Music Interview With Actor Kamal 02 Feb 2013,kamal interview 02nd february 2013,kamal interview sun music 02-01-13,kollywood diaries 02-01-2013,sun music kamal interview 02 feb 2013,kollywood diaries february,sun musc kamal haasan 02nd feb 2013 onlinw,kamal hasan kollywood diaries,kamal kollywood diaries,kollywood kamal sun music,sun music intervuiew kamal hasan,sun music special kolly wood diaries,kamal interview sun music,kaml interview,sun music special kamal interview 02nd feb 2012.

Viswaroopam Release In North India - Report

Posted: 01 Feb 2013 10:53 AM PST

Vishwaroopam latest News

Posted: 01 Feb 2013 10:51 AM PST

விஸ்வரூபம்: கமல் வந்த பின்னரே முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை!

Posted: 01 Feb 2013 10:37 AM PST


சென்னை: மும்பை சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் திரும்பி வந்தபின்னரே முஸ்லிம் அமைப்புகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றுகிறது.

முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கமலின் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பினரும், கமல் தரப்பினரும் தமிழக அரசின் உள்துறைச் செயலர் ராஜகோபாலை வெள்ளிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தைக்குத் தயார் என கடிதங்களை அளித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது வந்தால் போதும் என இரு தரப்பினரிடமும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமிய கூட்டமைப்பினரும், நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலை வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, தமுமுகவைச் சேர்ந்த அப்துல் சமது, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பக்ருதீன் ஆகியோரும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் உள்துறைச் செயலாளரைச் சந்தித்தனர்.

சென்னை நகர காவல் துறை ஆணையாளர் ஜார்ஜும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தார். வெள்ளிக்கிழமை மாலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்த நிலையில் விஸ்வரூபம் பட வெளியீட்டுக்காக மும்பை சென்ற நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை திரும்புகிறார். எனவே அரசின் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது.

அண்ணர் கமல்ஹாஸனுக்கு ஒரு திறந்த கடிதம்! – பத்திரிகையாளர் டிஎஸ்வி ஹரி

Posted: 01 Feb 2013 10:32 AM PST


அண்ணர் கமல் ஹாசன் அவர்களே!

என்னை விட வயதில் நீங்கள் மூத்தவர் – மரியாதைக்குரியவர், ஆகையால் இரண்டையும் சேர்த்து, அண்ணர்!

உங்க நடிப்பை ரசிப்பவன் நான்.

அதில் நீர் கை தேர்ந்தவர்.

விஸ்வரூபம் விஷயத்தில் நீங்கள் அடிப்பது சுத்த டகிலு!

அதற்காக நான் கூறும் காரணங்கள்:

விஸ்வரூபம் என்ற படத்தை நீங்கள் இயக்கித் தயாரித்தீர்கள். அது உமது வியாபாரம். அதற்காக நீர் தங்கியிருக்கும் வீடு வரை அடகு வைத்துத் தயாரித்ததாக பறை சாற்றுகிறீர். அதன் மூலமாக உமது ரசிகர்களை, ஏதோ தியாகப் பிழம்பு போல உம்மைச் சித்தரித்துக்கொண்டு, இமோஷனலாக கறுப்புத் தபால் [blackmail] செய்கிறீர். அது வியாபாரத்தின் அபார தந்திர-மந்திர-யந்திரம். அது பொய்யோ மெய்யோ சட்ட ரீதியாக, அதைக் குறை சொல்ல முடியாது.

இந்த வக்கிர புத்தியின் பின்னணிப் பின்னலில் உருவான சதித் திட்டத்தை புரிந்துகொண்டும், லாலிபாப் சாப்பிடுகையில் காண்டாமிருகத்தைக் கண்டு ஆச்சிரியப்படும் மழலைகள் போல, சில 'தொல்லைக்காட்சி' முதலாளிகளின் குற்றேவல் கட்டளைகளுக்கேற்ப, சில கத்துக்குட்டி நிருபர்கள் உமது ஆழ்வார்பேட்டை வீட்டின் முன்பும், மும்பை போன்ற பிற நகரங்களிலும் தேவுடு காத்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு, புளகாங்கிதம் அடைந்தவாறு போட்டி போட்டுக்கொண்டு, பெட்டி வாங்கியோ வாங்காமலோ, பேடிகள் போல பேட்டி எடுத்து, உமது முயல்விற்கான கருத்துச் சுதந்திரச் சவாலாக விஸ்வரூபத்திற்கான தடை உத்தரவைச் சித்தரித்து, தொண்டு புரிந்து வயிற்றைக் கழுவும் அவலத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை.

நீர் கொஞ்சம் கலை ஆர்வமிக்க ஒரு வியாபாரி.

விஸ்வரூபம் பட ரிலீஸின் உண்மை ரீல்களை அவிழ்த்து விடுகிறேன்.

வக்கம்போல, உமது அதி மேதாவித்தனத்தை இப்படத்தின் மூலம் மக்கள் மீது திணிக்க முயன்றுள்ளீர் என்கிறார்கள். இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து வியாபாரம் செய்வதால் லாபம் கிடைக்கும் என நம்பிப் படம் எடுத்தீர். அமெரிக்காவின் இஸ்லாமிய-பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் நீரும் ஒரு அங்கம் எனக் காட்டிக் கொண்டு ஒரு புதிய யுக்தியைக் கை ஆண்டீர். அதைக் குறை சொல்ல முடியாது, மாறாகப் பாராட்டலாம்.

இதை எல்லாம் கண்டு வினியோகஸ்தர்கள் மிரளவில்லை, அதிகம் ஆர்வம் காட்டவில்லை – காரணம் – உமது கடந்த காலப் படங்கள் பெரும்பாலும் வசூல் விஷயத்தில் ஃபணாலாகியுள்ளன.

விஸ்வரூபம் படத்தை விற்க பல தொலைக் காட்சி அலுவலகங்களின் படிகள் மீது ஏறி இறங்கினீர். Outright ஆக படத்தை விற்கத் தயார் என்றீர்.

(அப்படி பேரத்தை நடத்த முயற்சித்த அலுவலகங்களுள் ஜெயா தொலைக் காட்சியும் ஒன்று என நான் அறிகிறேன்.)

இது சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதாவை பிறந்த நாள் வாழ்த்து என்ற ஒரு 'பொது காரணம்' கூறி – பேரம் பேச சந்தித்தீர். பேரம் படியவில்லை என்பது இப்போது தெளிவு.

ஆனால், ஏதோ கனவுலகக் கோடிகளுக்கு முதல்வர் படத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார் என ரீல் விட சில நிருபர்கள் – உமக்கு வேண்டப்பட்ட சிலரால் தூண்டிவிடப்பட்டார்கள். அந்த சதி வேலையின் விகார உண்மைகள் வெளிவந்தன. அச்செயலுக்கெதிரான நாச வேலைகளில் அரசியல் தக்கார்கள் தாக்க முறபட்டனர்.

தேவை இல்லாமல் அரசியல் என்ற விஷயத்தைக் கையாண்டு லாபம் அடைய – தெரிந்தோ தெரியாமலோ முயற்சிகளை மேற்கொண்டீர்.

அந்த முயல்வுகள், தேவை இல்லாமல் சாலைகளை நோக்கி விரைந்து வந்து அடிபட்டுக் கிடக்கும் முயல்களின் நிலைக்கு உம்மை ஆளாக்கின.

படம் சென்ஸார் முடிந்து ரிலீஸுக்கு ரெடி என்ற நிலையை அடைகையில், DTH மூலமாக வீடுகளிலேயே படம் பார்க்கலாம் என்ற பகட்டான விளம்பரங்கள், நாள் தோறும், தொலைக் காட்சிப் பட்டித் தொட்டிகள் தோறும் விறகு விற்பதுபோல தோட்டிகள் விற்கத் துவங்கினர். இதில் பங்கெடுத்த ஏர்டெல் ஸ்தாபனம் – உமது அனைத்து வாதங்களையும் ஏற்றதாக நடித்தது.

இதோ கொஞ்சம் மிகையான கற்பனையுடன் அந்த discussion கள்:

நீர் தெளித்த புளுகுப் பன்னீர் 1:

தமிழகத்தில் சுமார் 7 கோடி மக்கள். அதில் சுமார் 3.5 கோடி மக்கள் படம் பார்ப்பவர்கள். சுமார் 2.5 கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ள தமிழகத்தில் – சாலை நெரிசல்கள், சினிமாத் தியேட்டர் கியூ வரிசைகள், வழியில் குறிக்கிடும் கால் நடைகளால் ஆன தொல்லைகள் என எல்லாவற்றையும் தவிர்க்க – குறைந்த பட்சம் 50 லட்சம் நபர்களாவது ரூ.1000 கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அதாவது வசூல் ரூ.500 கோடிகளைத் தாண்டும்.

ஏர்டெல்:

இவ்வளவு துல்லியமா நீங்க கணிச்சதுக்கு அப்புறம் நாங்க பூம் பூம் மாடு போல மண்டையை ஆட்டுவதைத் தவிர வேறென்ன செய்வது?

நீர் தெளித்த புளுகுப் பன்னீர் 2:

கேளிக்கை வரி என்ற பெயரில் அரசாங்கம் விதிக்கும் அநியாயச் சுமையிலிருந்து இரசிகர்களை விடுவிக்க இது ஒரு புரட்சிகரத் திட்டம். மேலும் தியேட்டர்களில் தம் அடிப்பது, பிற சௌகர்ய சொகுசுப் பழக்கங்களில் ஈடுபடவது என்பனவெல்லாம் நடவாத காரியங்கள். வீட்டில், குளு குளு அறையில், கோல்கோண்டா மேட்டர்களை கோப்பைகளில் ஐஸ் குண்டுகள் உதவியுடன் குடுகுடுப்பைகள் போல ஆட்டியபடி படத்தை இரசிக்க விரும்புபவர்கள் பலர்.

மேலும், இதனால் ஒரு டவுன்லோட்டை பல முறைப் பார்க்க ஆசைப் படுவோருக்கு ஜாலி, படு ஜாலி. படம் பார்க்கப்படும் ஒவ்வொரு அறையிலும் குறைந்த பட்சம் 5 இரசிகர்களாவது இருப்பார்கள். ஆக, இரசிகப் பெருமக்கள் எல்லோருக்குமே லாபம், அவர்களது சேவகனாகிய எனக்கும் லாபம். தொஞ்சு போயிருக்கும் டீ டி எச் ஸ்தாபனமான உங்களுக்கும்.. லாபம்! லாபம், லாபம், லாபமோ லாபம்!

ஏர்டெல்:

இவ்வளவு துல்லியமா நீங்க கணிச்சதுக்கு அப்புறம் நாங்க பூம் பூம் மாடு போல மண்டையை ஆட்டுவதைத் தவிர வேறென்ன செய்வது?

நீர் தெளித்த புளுகுப் பன்னீர் 3:

படத்தை உழைத்து, வியர்வை சிந்திக் குழைத்துத் தயாரித்த சினிமா விவசாயி ஆன எனக்கு, அதனால் வரக்கூடிய லாபத்தின் சரிபாதி கிடைக்க வேண்டும். கொள்ளை அடித்து இரத்தம் உறிஞ்சும் இடைத் தரக இரத்த காட்டேரிகள் டவுன் டவுன், அவுட் அவுட்! சுண்டைக் காய் சைஸ் சுண்டெலித் தனமான திரை அரங்க சுணக்குச் சுரண்டல்காரர்கள் டவுன், டவுன் அவுட், அவுட்!

ஏர்டெல்:

உங்க வேகம் எங்களுக்கு விவேகத்தைக் கொடுக்குது! வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் புதிய எடிஷணைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்பட்டு சிலிர்த்துப் போய்விட்டோம்!

இவ்வளவு துல்லியமா நீங்க கணிச்சதுக்கு அப்புறம் நாங்க பூம் பூம் மாடு போல மண்டையை அட்டுவதைத் தவிர வேறென்ன செய்வது?

நீங்க சொல்லும் அனைத்து condition களுக்கும் நாங்க ஓ கே. ஒரே ஒரு சின்ன விண்ணப்பம். இது சம்பந்தமான ரூ.1000 எனும் கட்டணத்தை மக்கள் எங்கள் payment gateway வாயிலாகச் செலுத்தவேண்டும் என்பதுடன், அதற்கு ஆகும் விளம்பரச் செலவுகள், விதிக்கப்படக் கூடிய வரிகள் ஆகியவற்றைக் கழித்து … நாங்களே உங்கள் 'ஆடிட்டர்'கள் கட்டளைகளுக்கேற்ப, வாராவாரம் வசூலான பணத்தின் உங்களது 50% பங்கை தவறாமல் செட்டில் செய்கிறோம் என எழுத்து வடிவத்தில் தர நீங்கள் அனுமதிக்க வேண்டும்.

நீர் தெளித்த புளுகுப் பன்னீர் 4:

ஆஹா! இதை விட நியாயமாக யார் நடந்து கொள்வார்கள்? எனக்கு ஓ கே. முதல் செக் ரிலீஸுக்கு 5 நாள் முன்னாடியே வந்திடணும்.

ஏர்டல்:

எங்கே கையெழுத்துப் போடணும்?

கமல் ஹாசனனின் உதவியாளர்:

அய்யா ஏர்டல் முதலாளி! இது வரை எவ்வளவு வசூலாகி இருக்குதோ … அதுல பாதிய செக் போட்டு அனுப்ப யூனிவர்ஸல் ஸ்டார் சொன்னாரு!

ஏர்டல் கணக்கர்:
நீங்களே ஃபோன் பண்ணினது நல்லதாப் போச்சு. இது வரை ரூ. 10 கோடிகூட வசூலாகல்ல. எங்க விளம்பர cost ஏ ரூ.14 கோடியத் தாண்டிருச்சி. எங்க பெரிய சாரு உங்க கிட்ட செக் அனுப்பச் சொல்லிக் கேக்கணும் … ஆனாக்க பாவம் கமல் சாரு ரிலீஸ் விஷயத்துல பிஸியா இருப்பாரு, அதுனால இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாரு. நீங்க பொறுமையாச் செக் அனுப்புங்க, அய்யா!

கமலின் உதவியாளர்கள், ஊக்குவிப்பவர்கள்:

நாம இன்னும் கொஞ்சம் டீப்பா ரிஸர்சு பண்ணி யோசிச்சிருக்கணும்ணே! ஏர்டெல்லு டீ டி எச் மூலமா படம் பாக்கரவங்க வெறும் .005% கூட இல்லைன்னு எவனோ ஒரு வீணாப்போன கம்ப்யூட்டர் கில்போத்ரன் சொல்லிட்டுப் போனான்.

கமல்:

நமக்குப் பணத்துக்குப் பணமும் வரல்ல. திட்டமிட்டபடி படத்தையும் ரிலீஸ் பண்ண முடியாது.

உதவியாளர்கள், ஊக்குவிப்பவர்கள்:

திரைப்பட வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களோட உங்க தொப்புள் கொடி உறவுன்னு பேச ஆரம்பிச்சு, பேச்சு வார்த்தைன்னு எல்லார்கிட்டயும் சொல்லி டைம் வாங்கினா நல்லதுதானே அண்ணே!

கமல்:

அவங்க இப்போ அடிமாட்டு விலைக்கில்ல கேப்பானுங்க!

உதவியாளர்கள், ஊக்குவிப்பவர்கள்:

பேசிப் பாக்கலாமே! எதையோ கட்டி மலைய இழுத்து … போனா எதுவோ … வந்தா மலைன்னு …

கமல்:

முயற்சி உடையோர் இகழ்சி அடையார்!

கமலின் உதவியாளர் 1:

'தலைவரு' ரொம்ப டென்ஷல இருக்காரு. வினியோகஸ்தர்கள் 'வினை'யோகஸ்தர்களாக ஆயிட்டாங்க. தியேட்டர்காரங்க திருடர்களாயிட்டாங்கன்னு கலைஞர் பாணியில அடுக்கு மொழியில பேசி நொந்து போயிகிட்டு இருக்காரு.

கமலின் உதவியாளர் 2:

ஆக, நாம அடிச்ச கூத்துனால படத்த இப்போதைக்கு ரிலீஸு பண்ண முடியாது. இத்த மறைக்க வேற ஒரு டகிலு தேவை.

கமலின் உதவியாளர் 1:

ஆமா!

கமலின் உதவியாளர் 2:

இதுல இஸ்லாமியர்கள நாம திட்டித் தீர்த்திருக்கோமே … பேசாம… இத்த இஸ்லாமியர்கள் அப்ஜெக்ட் பண்ண வழி பண்ணிட்டா?

கமல் உதவியாளர் 1

அத்த எப்படிச் செய்யறதாம்?

கமல் உதவியாளர் 2:

ரொம்ப ஈஸி. ஏற்கனவே சென்ஸார் ஆன படத்தை – மத நல்லிணக்க மொறையில போட்டுக் காட்டறோம்னு சொல்லி … நிறயாக் கத்தறவங்கள, நிறையா என்னன்னமோ கேக்கற சிறுபான்மைத் தலைவர்களக் கூட்டி, படத்தக் காமிச்சா … ஆளாளுக்கு கலாட்டா பண்ணி, காவல் துறைய அவங்க மிரட்ட, காவல் துறை படத்துக்குத் தடை ஏற்படுத்த அதுவே காரணமாயிடும். படத்துல செஞ்ச மாதிரி … இஸ்லாமிய அடிப்படைவாத-தீவிரவாத-பயங்கரவாத சதிகார, நாசகார கும்பல்கள் முன் தலைவர் முட்டி போட மாட்டார்னு நாம் சொல்லலாம். அதுக்குப் பப்ளிசிட்டி.

படத்துக்கு தடை விதிச்சாங்கன்னா … எதிர் கட்சிங்களுக்கு லட்டு தின்ன மாதிரி. சட்டமும் ஒழுங்கில்ல, ஒழுங்கும் மழுங்கி மக்கிரிச்சின்னு, ஸ்டாலின் அழகிரி மேட்டர திசை திருப்ப கலைஞர்ரு சிஎம்மை இல்லாத்ததையும் பொல்லாத்ததையும் சொல்லித் தாக்கி அறிக்கை விடுவாரு. அதுதான் சாக்குன்னு மத்த கட்சிங்க இதுல குதிக்கும். மலேசியாவுல படத்த ஒரு நாளுக்கு மேல ஓட உடல்லன்னு எவனுக்கும் தெரியாது… அதுனாலதான் அதப்பத்தி கூட இவ்வளவு முறை நாம கதை விட்டும் எவனும் பேசல்ல. இஸ்லாமியர்களோட மண்டையில் கார மிளகாய் என்ற சென்ஸார் ஆன படத்த வெச்சு அரைச்சு தேய்-தேய்ன தேய்ச்சு… நாம் தப்பிக்க நாமதான் நாமக் கட்டியை ரெடி பண்ணினோம்னு எந்த முண்டத்துக்கும் தெரியாம போயிரும்!

சொல்லி வைத்தாற்போல இஸ்லாமியர்கள் கலாட்டா, படம் தடை ஆகியவை நிகழ்ந்தன.

வழக்கம்போல கருத்துச் சுதந்திரம் தமிழகத்தில் மறுக்கப்பட ஒரு பெண் காரணம் என குற்றச்சாட்டுக்களை கலைஞர்ரு பல்லை நற நற வெனக் கடித்தவாறே முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தினார்.

அந்த கும்பலில் நீரும் கோவிந்தா போட்டீர்கள்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் துப்பில்லாத அரசு என தமிழக அரசை ஏசினீர்கள்.

குழம்பிய குட்டையை குழாயடிச் சண்டை அரசியலாக்க, தமிழகத்தில் போணியாகாத அரசியல்வாதியான சிதம்பரத்தினுடனான உமது ஹைதர் காலத்து நட்பை ஞாபகப்படுத்தி செட்டியாருக்கும் செக்கு மாட்டுக்கும் சிவலிங்கத்திற்கும், சிங்களவனுக்கும் முடிச்சுப் போடும் ரீதியில் ஏதையோ நீர் உளரியது வேலை செய்தது.

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க, தமிழகத்தில் காங்கிரஸ் காணங்கிரஸ் ஆனதற்கு தான்தான் முக்கியக் காரணம் என்பதை மறைக்க ஊன்றுகோல் தேடிக்கொண்டிருந்த மத்திய நிதி அமைச்சரது கையில் அரசியல் குண்டாந்தடியை நீங்கள் கொடுத்து, உபகாரி உத்தண்டராகி விட்டீர்கள்.

ஏற்கனவே சிடுக்காகிவிட்டிருந்த விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கிப் புண்ணியம் தேட ஒரு விஷயம் தெரியாத கத்துக் குட்டி வக்கீல் நவனீத கிருஷ்ணர் நீதி மன்றத்தில் – சம்பந்தமில்லா நிகழ்வுகளை மேற்கோள், கீழ்க்கோள், செயற்கைக் கோள் எனப் பூச்சாண்டி காட்டி, உளரிக்கொட்டி, கிளரி மூடினார்.

(ந. கி. உமக்கு வேண்டியவர் என சில பத்திரிக்கைச் சகுனிகள் சிண்டு முடிய ஆரம்பித்துள்ளனர், இது உண்மையா?)

சட்டம் ஒழுங்கு விஷயத்தின் அடிப்படையில் நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடைத் திரை சில மணி நேரம் சற்றே விலகியது.

உமக்குப் பல ஊர்களிலிருந்து படத்துக்காக, தேவையான அளவு தியேட்டர்களில் கூட்டமில்லை எனத் தெரிய வந்தது.

உம்மீது அபிமானமுள்ள சில காவல் துறை அதிகாரிகளிடம் கூறி … படத்தை ஓட விடாமல் செய்வதில் வெற்றி கண்டீரெனக் கூறுவோர் இன்று பலருண்டு.

தமிழக அரசின் மேல் முறையீடு, வெறும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு எனும் அபாயத்தின் பேரில் தாக்கலாயிற்று, தடை தொடர்கிறது.

மேலும் இமோஷனல் கறுப்புத் தபால் தலை வெளியீடு வேலைகள் நிகழ்த்த நீர் முயன்றீர். கருத்துச் சுதந்திரமில்லாத, மதச்சார்பின்மை இல்லாத இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்றீர்கள்.

பலர் அலுவலகப் பணிகள் முடிந்து வீடு செல்லும் வழியில் குழிதோண்டிய நிலையை உருவாக்கி தாமத்தை ஏற்படுத்தியதைத் தவிர இது வேறு எதையும் சாதிக்கவில்லை.

ஏதோ ஹிந்துக்கள் – இஸ்லாமியர்கள் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ளது போன்ற பூச்சாண்டி காட்டி, "மதங்களை நம்பி மோதிக்கொள்ளும் மட சகோதர்களே, உங்களது சச்சரவுகளை நீங்கள் நிறுத்தாவிடில், இந்த நாத்தீகக் கலியுக முருகன் வேறேதேனும் நாட்டிலுள்ள வருமான ஞானப் பழம் கிடைக்கும் பழனி மலையில் குடியேறி விடுவான்," என்பன போன்ற மிரட்டலை உதிர்த்தீர்.

(ஒரு நல்ல வசனகர்த்தாவை விட்டு மேட்டர எழுதிக்கொடுக்கச் சொல்லியிருக்கக் கூடாதா? கேமிரா முன் ரொம்பவும் சொதப்பி விட்டீர்! டயலாக் ரொம்ப ரொம்ப சுமார். ஆனால் வழக்கம் போல உமது நடிப்பு பட்டையைக் கிளப்பிற்று!)

இப்போது உள்ள இடியாப்பச் சிக்கல்களில் உழல்வதாக காட்டிக் கொள்ளும் 'தொல்லைக் காட்சிகள்' – படம் நன்றாக இருந்ததா, வசூலாகும் நிலையில் உள்ளதா, இல்லையா என்ற பேச்சில் இறங்கத் தயாராக இல்லை.

ஏனெனில் அதில் டி ஆர் பி கள் ஏறாது. சுருக்கமாகச் சொன்னால் – நன்றாக எடுக்கப்பட்டிருக்கும், வசூல் வாய்ப்பில்லாத விஸ்வரூபம் என்ற ஓடாத படத்தின் நிதர்சன நஷ்டத்தை மறைக்க பல பட்டாசு ரக சுதர்சன சக்கிரங்களை சுழல விட்டுள்ளீர்.

கமால் வேலை காட்டும் கமல் அவர்களே! சபாஷ்!

இனி திங்களன்று தடை நீங்குமா, நீங்கினால் படம் செவ்வயன்று ஓடுமா என யாருக்கும் தெரியாது. ஓடினாலும், ஓடாவிட்டாலும் உமக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. நீர் தேட நினைத்த விளம்பரம் சென்ற புதன் அன்றே உமக்குக் கிடைத்துவிட்டது.

ஏதேனும் ஏமாறக் கூடிய சோணகிரி அனேகமாக வியாழன் அன்று ரெடியாகி இருப்பார்.

அப்படி படம் ஓடாத சில்லறைச் சில்ஃபோன்ஸ் விஷயத்தைத் திசை திருப்ப முயலும் வடுமாங்காய் முட்டாள்கள் சிலர் கலவரத்தில் இறங்கி, எவனவனது தொடைகளில் அடுத்த சில சனி ஞாயிறுகளில் குண்டுபாயுமோ … தண்டு தாக்குமோ … அந்தப் ஸ்ரீனிவாச பெருமாளுக்குத் தான் வெளிச்சம்.

படத்தைப் புரிந்து கொள்ள முடியாத, "இந்த துடைப்பக்கட்ட bore படத்த ஏன் கமல் எடுத்தாரு" என கேட்கும் விசர் விசிறிகளது, விமர்சகர்களது குரல்கள் எழும்புமுன், சம்பந்தப்பட்ட எல்லாக் குரல்வளைகளும் நெரிக்கப்படுமா?

யாம் அறியோம் பராபரமே!

படத்தில் முதலீடு செய்த பண முதலைச் சூதாடிக் கூத்தாடிகளோ, "அப்பாடா – நல்லவேளையாய், நாம் நமது தாடிகளோட ஒரு பகுதியை மழித்துக் கொண்ட நிலையோடு தப்பித்தோம். இதெல்லாம் கமல் திரைத் தொழிலைவிட்டு விலகி, ரியல் எஸ்டேட் தொழிலில் நிரந்தரமாக இறங்கி லாபம் காண முற்படும் இரகசியத்தை கவனிக்காமல் இருக்கச் செய்யும் பஞ்ச தந்திரத்தின் முதல் இயந்திரம் இதுதான் என யாரும் கண்டுகொள்ளவில்லை" எனப் பெருமூச்சு விடுவதை யாராவது பார்க்கவும் தான் முடியுமா?

இந்தப் புதிய தகவல் அந்தப் பழைய பரமசிவனாருக்குத் தான் வெளிச்சம்.

சில சிறு திருத்தங்களுடன் ஒரு ஆங்கிலப் பழமொழியின் புதிய தமிழாக்கம்:

சிலரை, சில காலம் வரை முட்டாளாக்கி லாபம் சம்பாதிக்கலாம்.

பலரை, பல நேரங்களில் முட்டாளாக்கி சில்லறை தேடலாம்.

ஆனால் எல்லோரையும், எப்போதும் முட்டாளாக்கி கொள்ளை லாபம் அடிக்க முடியாது.

அப்படி ஆக்க முயல்பவர் தாக்கப்படும்போது, அது நாள் வரை சம்பந்தப்பட்டவரைக் காத்தவர்கள் சாக்குபொக்குச் சொல்லி, பாதுகாப்பாகக் காற்று வாங்க விலகிச் செல்வார்கள்.

இறுதியில் கோலோச்சியதாக எண்ணும் குண்டக்க முண்டக்க குண்டலகேசிகள் கூமுட்டைகளாகி, தாமே தமக்குக் குழிதோண்டி, அதில் தாமே விழுந்து அதனால் விழுங்கப்பட்டு காணாமலும் போவார்கள்!

குறிப்பு: கட்டுரையாளர் டிஎஸ்வி ஹரி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர். www.tsvhari.com எனும் பெயரில் இயங்கும் தனது தளத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

உலக நாயகனின் பொய்மூட்டைகள் : ‘மத மோதலாக’ மாறிய கமலின் விளம்பரப் பேராசை!

Posted: 01 Feb 2013 10:26 AM PST


தான் என்ன நினைக்கிறோமோ அல்லது என்ன ஆசைப்படுகிறோமோ அதை மட்டுமே செய்து முடிப்பதில் தீவிரமாகவும்,பிடிவாதமாகவும் இருப்பவர் கமல்.

அவருடைய முந்தைய பல நடவடிக்கைகளில் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. கடைசிவரை அதற்கு மெனக்கிடுவார்; போராடுவார்; அதற்காக நிறைய நாடகங்களை தனது ரசிகர்களும், அவருடைய நலம் விரும்பிகளும் நம்புப்படி கனகச்சிதமாக நடத்துவார்.

அப்படித்தான் 'விஸ்வரூபம்' விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதமும்…இப்போதுவரை சொல்லிக்கொண்டிருக்கும் பொய்களும்…

யாருமே சீண்ட வராத நிலையில் இப்போது விஸ்வரூபத்துக்கு தான் எதிர்பார்த்ததற்கும் மேல் இலவசமாக பப்ளிசிட்டி அவர் எதிர்பார்த்ததுக்கும் மேல் கிடைத்திருப்பதில் உள்ளுக்குள் சந்தோஷமாகவும், வெளியில்

ஏதோ 100 கோடி ரூபாய் தன் கையை விட்டு போய் விட்டது என்ற சோகத்திலும் இருப்பது போன்ற ஒரு முகபாவத்தையும் நம்மிடம் காட்டி வருகிறார். ஆனால் இதில் சில உண்மைகளை நாம் சொல்லியே ஆக வேண்டும். சொல்லப்போனார் அவருடைய மிகச்சாதாரண விளம்பர பேராசை இந்தளவுக்கு மத மோதலாக மாறக்காரணமே அவர் திட்டமிட்டி செய்த

சில வேலைகளும், சொன்ன பொய்களும் தான்.

முதலில் 'விஸ்வரூபம்' படத்தை பொருத்தவரை இது அவருடைய சொந்தப்படம் என்பதால் சில கோடிகளைப் போட்டு பல கோடிகளை அள்ள வேண்டும் எபது தான் அவருடைய பேராசையின் ஆரம்பம்.

அதற்காக அவர் ஆரம்பத்திலிருந்தே சில பொய்களை தொடர்ச்சியாக கூறி வருகிறார். இப்போதும் அது தொடர்கிறது.

அதாவது முதன்முதலில் 'விஸ்வரூபம்' படத்துக்காக மீடியாவை சந்தித்த கமலிடம் " இந்தப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று நிருபர்கள் கேட்டபோது ஒரு 100 கோடின்னு எழுதுங்களேன், ஏன் எனக்காக அப்படி எழுதமாட்டீர்களா..? என்று கேட்டார்.

அன்றிலிருந்து அந்த 100 கோடியைத் தான் அவர் படத்தின் பட்ஜெட்டாக சொல்லி வருகிறார். ஆனால் நிஜத்தில் அவ்வளவு ரூபாய்களை அவர் இந்தப்படத்தில் செய்யவில்லை என்பதே உண்மை. அதிகபட்சம் அவர் ரூ 45 கோடி செய்திருந்தாலே பெரிய விஷயம்.

இந்தப் படம் கேன்ஸுக்கு போகிறது என்றும் அதற்காக சிறப்பு அனுமதி பெற்றிருப்பதாகவெல்லாம் கமல் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார் கடந்த மே மாதத்தில். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது கோலிவுட் அறிந்த கமல் சொன்ன 'அண்டப்புழுகின்' ரகசியம்.

அதேபோல டி.டி.ஹெச் ஒளிபரப்பில் பிரச்சனை ஏற்பட்டபோது அது சம்பந்தமாக சென்னையிலுள்ள ஹயாத் ஹோட்டலில் மீடியாக்களை சந்தித்த கமல், 'கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து நான் செய்ய நினைத்தாலும் கிடைக்காத பப்ளிசிட்டி இன்று எனது 'விஸ்வரூபம்' படத்திற்கு தியேட்டர் காரர்களின் எதிர்ப்பால் எனக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது.

இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,' என்று சொன்ன கமல், நேற்று மும்பை மீடியாக்களிடம் "என் படத்தின் விளம்பரத்துக்காக நான் இந்த வேலைகளையெல்லாம் செய்கிறேன் என்று சொல்வது மோசமானது," என்று கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

மேலும் 'விஸ்வரூபம்' படத்தில் பிரச்சனைக்குரிய காட்சிகள் இருக்கிறது என்று கேள்விப்பட்டு சில முஸ்லீம் அமைப்பினர் கமலிடம் எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டுங்கள் என்று சொன்னபோது அவர்களை ஒரு துச்சமாக எண்ணி "ஒரு சிரு கும்பல்" என்று அதிமேதாவித்தனமாக பேசினார்.

கடைசிவரை எந்த முஸ்லீம் அமைப்புகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமோ அவர்களை கொஞ்சமும் மதிக்காமல் தனக்கு ஆதரவாக இருக்கின்ற சில முஸ்லீம் நண்பர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு " எங்களுக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லை" என்று மீடியாக்களிடம் கூசாமல் பொய் சொன்னார். தமிழக அரசிடம் அரசியல் பண்ண ஆரம்பித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக "தான் சொன்ன பொய்களை எல்லாம் கொஞ்சமும் எடிட் செய்யாமல் அதை அப்படியே வெளியிட்ட மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்து உங்களால் தான் என்னுடைய விளம்பரப்பேராசை நிறைவேறியது" என்று சொல்லாமல் சொன்னார்.

30 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இதுவரை யாருக்குமே இறங்கி வராத தமிழக முதல்வர் ஜெயலலிதா, முஸ்லீம் அமைப்புகளிடம் பேசி கமல் பிரச்சனையை தீர்த்துக்கொண்டால் விஸ்வரூபம் படத்துக்கு அரசு முடிந்த அளவு உதவியாக இருக்கும் என்று சொல்லியும் கூட "இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை" என்று அரசை மறைமுகமாக குற்றம் சாட்டினார். நான் கோபமாக இருக்கிறேன் என்றார்.

ரசிகர்களிடம் சக திரையுலக பிரபலங்களிடமும் அனுதாபத்தை வாங்கி ரசிகர்கள் அவருக்கு 1,000 ரூபாய் 2,000 ரூபாய், சிலர் 10 ஆயிரம் ரூபாய் என்று மணியார்டர் அனுப்பும் அளவுக்கு மிக கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு அவருடைய நேர்மையை சற்றே சந்தேகத்தோடு பார்க்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.

அவருடைய அண்ணன் சந்திரஹாசன் "விஸ்வரூபம் தடைக்கு காரணம் அரசியல் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்க, கமலோ மும்பையில் உட்கார்ந்து கொண்டு இதேபோன்று ஒரு சூழ்நிலை இன்னொருமுறை எனக்கு நடந்தால் நான் வேறு இடத்துக்கு போகும் முடிவை பரிசீலனை செய்வேன்," என்று அரசை மறைமுகமாக மிரட்டும் தொணியில் பேசினார்.

எல்லாவற்றுக்கும் மேல் 'விஸ்வரூபம்' படத்தின் 2-வது பாகத்தையும் சத்தமில்லாமல் எடுத்து வைத்து விட்டார். விஜய்டிவியில் இதைப்பற்றி வாய் உளறிய படத்தின் ஹீரோயின் பூஜாவை அங்கேயே கடிந்து கொண்ட கமல் இன்றுவரை அதைப்பற்றிய உண்மைகளை பேசாமல் மெளனம் காத்து வருவது அவரது நேர்மையின்மையின் உச்சம்.

இப்படி விஸ்வரூபம் விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும், தனக்கு பக்கபலமாக நின்ற ஊடகத்தையும், பிரபலங்களின் ஆதரவையும் தனக்கும் தன் படத்துக்கும் சாதகமாக மாற்றி இப்போது உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் கமலின் அதிகபட்ச விளம்பரப் பேராசையை விட அவரது மதவாதப் போக்கை எதிர்க்கும் முஸ்லீம் அமைப்பினர் எவ்வளவோ மேல்…

உண்மையை அப்படியே பேசுவதில்!

- மிஸ்டர் ரைட்

கடல் : சிறப்பு விமர்சனம் (பேசாம மணிரத்னம் கடல்லயே குதிச்சிருக்கலாம்!)

Posted: 01 Feb 2013 10:23 AM PST


1980களிலிருந்து தமிழ்சினிமாவை ரசிப்பவர்கள் மறக்காத டைரக்டர்களில் ஒருவர் மணிரத்னம். இன்றைக்கும் சினிமாவுக்குள் டைரக்டராக வரும் புதியவர்கள் எல்லோருமே நான் இவர்களுடைய படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டேன் என்று அடுக்கும் டைரக்டர்களின் லிஸ்டில் கண்டிப்பாக மணிரத்னத்துக்கும் ஒரு இடம் உண்டு.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை தமிழ்சினிமாவுக்குள் அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு. இன்றைக்கும் அவருடைய படம் என்றால் அதற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் அதற்கு அவருடைய நாயகன், தளபதி, மெளனராகம் போன்ற ஆரம்பகால படங்களைத் தான் சொல்லலாம்.

அந்தளவுக்கு அவருடைய படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்போடு தான் இன்றைக்கும் நாம் பார்க்க போக வேண்டியிருக்கிறது. ஆனால் அவரோ தன்னையும் ஏமாற்றி விட்டு, படம் பார்க்க வரும் ரசிகர்களையும் ராவணனில் ஏமாற்றியதைப் போல ஏமாற்றியிருக்கிறார்.

ஆமாம் கெளதம் கார்த்திக், துளசி என எதிர்ப்பார்ப்புக்குரிய இரண்டு அறிமுகங்களை வைத்து ஒரு சுவாரஷ்யமில்லாத உப்புச்சப்பே இல்லாத ஒரு படமாகத்தான் 'கடல்' படத்தை கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.

எதற்காக இவர் இப்படியெல்லாம் படமெடுக்கிறார், யாருக்காக இப்படி ஒரு படத்தை தைரியமாக டைரக்ட் செய்கிறார்? என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு மீனவ சமுதாயத்தைப் பற்றி படத்தில் திரைக்கதையாக்கி படமாக கொடுத்திருக்கிறார் மணிரத்னம். ஆனால் காட்சிக்கு காட்சி கிறிஸ்தவ அமைப்புகளும் போர்க்கொடி தூக்குவதற்கு நிறைய காட்சிகளையும்,டயலாக்குகளையும் உள்ளே வைத்து எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் மணிரத்னம்.

இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு ஒளிப்பதிவு வித்தையை மட்டும் திரையில் காட்டும் மணிரத்னம் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து பலதரப்பட்ட மக்களையும் பார்த்தால் நல்லது. அவர்களிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளது. அவற்றையாவது கற்றுக்கொண்டு ஒன்றிரெண்டு நல்ல படங்களை தர முயற்சி செய்யலாமே..?

ஜெயமோகனிடமிருந்து ஒரு கதையை வாங்கினீர்கள் சரிதான். ஆனால் அதையாவது ரசிக்கக்கூடிய கதையாக கேட்டு வாங்கியிருக்க வேண்டாமா..? உங்களுக்குத்தான் தமிழ் நன்றாக பேசவராது என்று வைத்துக்கொள்வோம். அழகான தமிழில் பேசக்கூடிய அர்ஜூனையாவது விட்டு வைத்திருக்கலாமே?

எதற்கு கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள் என்ற பில்டப். தேவையே இல்லையே..? அதிலும் ராதாவின் மகளை இவ்வளவு தொம்மையான கேரக்டரில் காட்டுவதற்கு பதிலாக அக்கா கார்த்திகாவுக்கு கே.வி.ஆனந்த் கிடைச்ச மாதிரி அவரை வெறொரு டைரக்டருக்காகவாவது விட்டு வைத்திருக்கலாமே..?

நீங்கள் அறிமுகப்படுத்திய மியூசிக் டைரக்டர் தானே ஏ.ஆர்.ரஹ்மான்? அவரிடம் ஒரு 4 நல்ல ரசிக்குபடியான பாடல்களை உங்களால் வாங்க முடியாதா..? கெளதம்மேனனிடல் போய் கேளுங்கள் ரஹ்மானிடம் எப்படி ஹிட் பாடல்களை வாங்க வேண்டும் என்று…

கேமரா,லொக்கேஷன்ஸ் எல்லாமே சரியாகச் செய்ய முடிந்த உங்களால் திரைக்கதையையும், ரசிகர்களின் தற்போதைய ரசிப்புத் திறனையும் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் எப்படி இப்படி ஒரு குப்பைத்தனமான படம் எடுக்க முடிகிறது?

மணிரத்னத்துக்கு நாம் சொல்லிகொள்வது ஒன்றே ஒன்றுதான்.

உங்கள் படங்களை ரசிக்க இப்போதும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம், ஆனால் அதற்கான முதல் அடியையாவது நீங்கள் முன்னால் எடுத்து வையுங்கள். இல்லையென்றால் படத்தை தயாரித்தவுடன் அதை படத்தில் பங்குபெற்றவர்களுக்கு ஒரு சிடியும், உங்கள் ஃபேமிலிக்கு சிடியுமாக போட்டுக் கொடுத்து விடுங்கள். ஆயுசு முழுக்க அவர்கள் மட்டுமே போட்டு பார்த்து வெறியை தீர்த்துக் கொள்ளட்டும்.

அப்புறம் இன்னொன்னு, 'கடல்' என்று பெயர் வைத்து விட்டு கால் காசைக் கூட தேர்த்தாத ( கண்டிப்பாக தேர்த்தாது ) படத்துக்கு ரிலீஸுக்கு முன்பு ஓவர் பில்டப் கொடுக்கும் மலிவான பப்ளிசிட்டி வேலைகளை விட்டு விடுங்கள்.

ஆகா மொத்தத்தில் கடல் – பேசாம மணிரத்னம் அதிலேயே குதிச்சிடலாம்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் :

இங்க போட்டோவுல இருக்கிற லிப்லாக் சீன் படத்துல கண்டிப்பா கிடையாது. அதெல்லாம் போஸ்டர் பப்ளிசிட்டிக்கு மட்டும் தான் போல.. அதனால் இந்த சீனுக்குன்னு கெளம்பி போயிட்டு அப்புறம் ஏமாந்து போயிடாதீங்க…

World News Today 01-02-2013 | World Today 01-02-13 | World News 01-02-2013 | World News Today 01-02-2013 | Polimer Tv News - 01-02-13 | Ulagil Indru - Polimer News

Posted: 01 Feb 2013 10:16 AM PST



World News Today 01-02-2013 | World Today 01-02-13 | World News 01-02-2013 | World News Today 01-02-2013 | Polimer Tv News - 01-02-13 | Ulagil Indru - Polimer News

Sun TV Cinema Seithigal 01-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

Posted: 01 Feb 2013 10:13 AM PST


aadalam boys chinnatha dance movie photos, abcd tamil movie stills, any body can dance prabhu deva stills, Prabhu Deva, prabhu deva abcd movie photos,Actor Kamal latest stills, four frames kalyanam, Kamal, Kamal Haasan, kamal hassan, kamal hassan in viswaroopam stills, kamal hassan latest photos, kamal hassan new pictures, kamal hassan viswaroopam photos, kamal latest images, kamal latest photos, kamal latest pictures, kamal latest stills, kamal viswaroopam stills, pooja kumar hot pics, pooja kumar in viswaroopam, pooja kumar tamil actress, vishwaroop kamal hassan photos, vishwaroop movie stills, viswaroopam heroine pooja kumar, viswaroopam kamal latest stills, viswaroopam kamal pics, viswaroopam movie stills, viswaroopam pooja kumar photos, viswaroopam tamil movie,Arvind Swamy, gauthami tamil actress, Kamal Haasan, kamal hassan, kushboo latest stills, kushboo saree photos, kushboo saree pictures, mansoor ali khan tamil actor, mumtaz tamil actress latest photos, pooja kumar tamil actress, Prabhu, Prasanna, Radha Ravi, Radhika Sarathkumar, simbu, Sivakumar, Sneha, Vijayakumar,actor vikram latest images, anirudh music director, bejoy nambiar director, chiyaan vikram latest photos, chiyaan vikram stills, david movie 2013, david movie jeeva stills, david tamil movie, isha sharvani in david movie pics, isha sharvani latest photos, jeeva latest photos, jeeva new stills, jeeva tamil actor images, Nassar, Tabu, tabu stills in david movie, tamil actor jeeva photos, vikram in david movie stills, vikram new photosactress priyamani in chandi movie, actress priyamani latest pictures, chandi movie photos, chandi telugu movie stills, Dasari Narayana rao, priyamani cute images, priyamani cute pictures, priyamani cute stills, priyamani latest photo gallery, priyamani latest stills, priyamani new images, ramanaidu producer, Ramanaidu Studio, Shobha Rani, Sunil

Amaithipadai Coconut Scene - Sathya Raj & Manivannan

Posted: 01 Feb 2013 10:07 AM PST


Amaithipadai Coconut Scene - Sathya Raj & Manivannan

SPB and Haricharan sings Sorgam Madhuvile

Posted: 01 Feb 2013 09:51 AM PST


SPB and Haricharan sings Sorgam Madhuvile from Sattam En Kaiyil in Isaignaniyin Isai Payanam

Facebook In Mobile Ratio Increase

Posted: 01 Feb 2013 11:07 AM PST

TN Governor Rosaiah Speech In Assembly Meeting

Posted: 01 Feb 2013 09:45 AM PST





TN Governor Rosaiah Speech In Assembly Meeting
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்குக்கு அரசு மணி மண்டபம் அமைத்தது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருந்த டேம் 999 படத்திற்கு தடை விதித்தது போன்ற தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தை சர்வதேச அமைப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும்

இலங்கையில் தமிழ் குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் மிகவும் கண்டிக்கதக்கவை. மத்திய அரசு இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான விவகாரத்தை சர்வதேச அமைப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கென இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கோரிக்கை

வன்முறை மற்றும் பாலியல் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கும் போது பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் காட்சிகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறேன் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Lokpal To Curb Corruption - Special Debate - 01-02-2013 - Vivatha Medai

Posted: 01 Feb 2013 09:39 AM PST


Lokpal To Curb Corruption - Special Debate - 01-02-2013

Virunthinar Pakkam – Sathyan – Sooriya Vanakkam Sun TV 01-02-2013

Posted: 01 Feb 2013 09:30 AM PST



Virunthinar Pakkam – Sathyan – Sooriya Vanakkam Sun TV 01-02-2013

israel – Palestinian Conflict BY.K.S.THURAI

Posted: 01 Feb 2013 09:28 AM PST

சீமான் உரை முத்துகுமார் நினைவு 2013

Posted: 01 Feb 2013 09:27 AM PST


சீமான் உரை முத்துகுமார் நினைவு 2013

Kana Kanum Kalangal Kalloori Salai 01-02-13 | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 01-02-13 | Vijay Tv Serial 01stFebruary2013 | Kana Kanne | Kana Kanum Kalangal Kalloori Salai 01-02-13 Watch Online Kana Kanum Kalangal Kalloori Salai

Posted: 01 Feb 2013 09:42 AM PST




Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 01-02-13 ,Vijay Tv Kana Kanum Kalangal 01-02-13,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 01stFebruary2013,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 01-02-13 ,Kana Kanum Kalangal 01-02-13,Kana Kanum Kalangal Kalloori Salai 01stFebruary2013,
Kana Kanum Kalangal Kalloori Salai New Serial Vijaytv, Kana Kanum Kalangal Kalloori Salai Promo, Kana Kanum Kalangal Kalloori Salai Promo Video, Kana Kanum Kalangal Kalloori Salai Serial,kana kaanum kalangal 01-02-2013 Video | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 01-02-13 This Week Promo Video | Vijay tv Serial 01stFebruary2013


Mexico City blast at state oil firm Pemex kills 25

Posted: 01 Feb 2013 08:54 AM PST




The number of people killed by a blast in Mexico City at the headquarters of the state oil company, Pemex, has risen to 25, the interior minister has said.

Karthigai Pengal Sun Tv Serial - 01-02-13 | Karthigai Pengal 01st February 2013 | Sun Tv Serial 01st February 2013 | Sun Tv Karthigai Pengal 01st Feb 2013 | Sun Tv Serial Karthigai Pengal 01-02-13 | Karthigai Pengal 01.02.13 | Watch Karthigai Pengal Serial 01st February 2013

Posted: 01 Feb 2013 09:19 AM PST






Karthigai Pengal Promo | Karthigai Pengal Sun Tv Serial | Karthigai Pengal Tamil Serial Promo | Sun Tv Serial Karthigai Pengal Promo.Karthigai Pengal Promo,Sun Tv Serial Karthigai Pengal,Thiru Pictures Karthigai Pengal,Karthigai Pengal Tamil Serial,Karthigai Pengal New Serial Online,Karthigai Pengal Serial Video,Sun Tv New Serial Karthigai Pengal,Karthigai Pengal Serial Tamil Sun Tv online,Karthigai Pengal Thiru Pictures,Thiru Pictures Production New Serial Karthigai Pengal,Sun Tv Serial Online

Karthigai Pengal 01-02-2013 | Karthigai Pengal 01-02-13 Sun TV Serial | Sun tv Karthigai Pengal 01-02-13 | Sun tv Serial 01st February 2013 | Watch Sun Tv Karthigai Pengal Serial 01st February 2013 | Watch Karthigai Pengal 01-13-2013
Sun TV Karthigai Pengal 01-02-2013 online. Tamil Serial Karthigai Pengal 01-02-13 online. Tamil Drama Karthigai Pengal February 01st 2013 Sun TV | Karthigai Pengal 01-02-2013 | Sun Tv Serial | Karthigai Pengal 01.02.2013 | Karthigai Pengal Sun Tv Serial | Watch Online Karthigai Pengal | Karthigai Pengal 01-02-2013 | Sun Tv Shows Karthigai Pengal Serial 01-02-2013 | Karthigai Pengal 01st February 2013 | Karthigai Pengal 01-02-2013 | Suntv serial Karthigai Pengal 01-02-2013 | Suntv serials 01st February 2013 online, Karthigai Pengal 01-02-13, Karthigai Pengal Serial Online 01-02-13,Sun Tv Karthigai Pengal 01st February 2013,01-02-13 Karthigai Pengal,Latest Episode Karthigai Pengal 01 February, Karthigai Pengal serial 01-02-2013,Tamil TV serials Karthigai Pengal Watch Online Sun tv daily Serial Update by techsatish
Latest Episode Karthigai Pengal,Watch Today Episode February ,February 2013,February Sun serial,Suntv serial,tv,tamil,tv serial,Sun,Febe,ser
Karthigai Pengal 01-02-13 - Sun Tv Serial | Karthigai Pengal 01.02.13 | Sun Tv Shows Karthigai Pengal Serial 01st February 2013 | Sun Tv Karthigai Pengal 01-02-13 | Sun Tv Serial 01st February 2013 | Watch Sun Tv Serial Karthigai Pengal, Karthigai Pengal 01-13-13, Karthigai Pengal Serial Online 01-02-13,SunTv Karthigai Pengal 01st February 2013,01-02-13 Karthigai Pengal, Karthigai Pengal Today 01-02-13, Karthigai Pengal 01-02-13, Karthigai Pengal 01-02-13, Karthigai Pengal Serial Online 01-02-13,Suntv Karthigai Pengal 13th February 2013,01-02-13 Karthigai Pengal, Karthigai Pengal Today 01-02-13,Sun Serial 01-02-13,on,for,Episode,For,Feb,Feb,February,February Tamil Serial
Watch Tamil Serial,Drama,Ser,Tamil Tv Shows,SunTv,October Serial SunTv,SunTv Serial Free Online At Techsatish.
Karthigai Pengal 01-02-2013 | Sun tv Karthigai Pengal 01-02-13 | Sun tv Serial 13th February 2013 | Karthigai Pengal 01-13-2013 | Sun tv Karthigai Pengal 01-02-13 | Sun tv Serial 01st February 2013
Karthigai Pengal 01-02-13, Karthigai Pengal Serial Online 01-02-13,SunTv Karthigai Pengal 01st February 2013,01-02-13 Karthigai Pengal, Karthigai Pengal Today 01-02-13, Karthigai Pengal 01-02-13,on,for,Episode,For,Feb,Feb,February,February Tamil Serial
Watch Sun TV Serial Karthigai Pengal 01-02-13 Online At Techsatish.net | Karthigai Pengal 01-02-2013 | Sun Tv Shows Karthigai Pengal Serial 01st February 2013

Nambikkai - Episode 34

Posted: 01 Feb 2013 08:53 AM PST

Winter Freezing Rain

Posted: 01 Feb 2013 08:52 AM PST

Towers Collapsing in Slow Motion

Posted: 01 Feb 2013 08:51 AM PST

Vazhkkai - Episode 34

Posted: 01 Feb 2013 08:51 AM PST

Sorgam – Episode 34

Posted: 01 Feb 2013 08:49 AM PST