techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி

Posted: 24 Mar 2013 11:42 AM PDT

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! 

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! 

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில: 
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார். 
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. 

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்". 

** 
பழைய சாதத்தை எப்படி செய்வது: 
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். 
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். 
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

Kelvikku Enna Bathil - Velmurugan, Tamizhaga Vazhvurimai Katchi

Posted: 24 Mar 2013 11:36 AM PDT

Kelvikku Enna Bathil - Velmurugan, Tamizhaga Vazhvurimai Katchi

This posting includes an audio/video/photo media file: Download Now

Nanbenda Debate Show - Food 24-03-13

Posted: 24 Mar 2013 11:33 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

Puthiyathalaimurai TV 8PM News Indraya Dhinam 24-03-13

Posted: 24 Mar 2013 11:30 AM PDT


Puthiyathalaimurai TV 8PM News Indraya Dhinam 24-03-13

This posting includes an audio/video/photo media file: Download Now

Mansoor Ali Khan View & Comments on Eelam Freedom & War

Posted: 24 Mar 2013 11:27 AM PDT


Mansoor Ali Khan View & Comments on Eelam Freedom & War

This posting includes an audio/video/photo media file: Download Now

Shivam Vijay Tv Serial This Week Promo

Posted: 24 Mar 2013 11:26 AM PDT


Thumbnail



Aid for Migrants : Special Coverage

Posted: 24 Mar 2013 11:25 AM PDT


Aid for Migrants : Special Coverage

This posting includes an audio/video/photo media file: Download Now

Narayanasamy On Student Protest

Posted: 24 Mar 2013 11:24 AM PDT


Narayanasamy On Student Protest

This posting includes an audio/video/photo media file: Download Now

Minister on GAIL Project

Posted: 24 Mar 2013 11:23 AM PDT


Minister on GAIL Project

This posting includes an audio/video/photo media file: Download Now

Airtel Super Singer 4 This Week Promo

Posted: 24 Mar 2013 11:22 AM PDT





Uravugal Thodarkathai Vijay Tv Serial This Week Promo

Posted: 24 Mar 2013 11:14 AM PDT

Thumbnail


புதினாக்கீரையும் அதன் மருத்துவ குணங்களும் !!!

Posted: 24 Mar 2013 11:13 AM PDT

புதினாக்கீரையும் அதன் மருத்துவ குணங்களும் !!!

வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.

1) உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். (புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்.

2) உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.

3) இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும். மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் 'கர்புர்' ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

4) பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.

5) உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.

6) புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள் தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.

7) ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும். மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்

இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) புதினாக்கீரை மூலம் தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.

En Kanavan En Thozan This Week Promo

Posted: 24 Mar 2013 11:04 AM PDT


7C Vijay Tv Serial Promo

Posted: 24 Mar 2013 10:55 AM PDT


Thumbnail


Sun Tv Serial Bairavi - 24-03-13

Posted: 24 Mar 2013 10:52 AM PDT





un Tv Serial Bairavi - 10-03-13

Office Vijay Tv Serial Promo

Posted: 24 Mar 2013 10:13 AM PDT


Reasons behind not getting involved in Tamil Eelam Issue

Posted: 24 Mar 2013 09:53 AM PDT


Reasons behind not getting involved in Tamil Eelam Issue

This posting includes an audio/video/photo media file: Download Now

Crash Compilation

Posted: 24 Mar 2013 09:49 AM PDT


This posting includes an audio/video/photo media file: Download Now

aking A Bicycle Down The Slide

Posted: 24 Mar 2013 09:48 AM PDT


This posting includes an audio/video/photo media file: Download Now

Tamil short film – Kadhalukku Kan Illai

Posted: 24 Mar 2013 09:47 AM PDT


This posting includes an audio/video/photo media file: Download Now

I shooting dropped

Posted: 24 Mar 2013 09:45 AM PDT

I shooting dropped

This posting includes an audio/video/photo media file: Download Now

Captain TV 24-03-2013 6 pm Headline News

Posted: 24 Mar 2013 09:42 AM PDT




Captain TV 24-03-2013 6 pm Headline News

ரோட்டின் மேடு, பள்ளத்தை கண்டறியும் "சென்சார்': மதுரை மாணவர்கள் அசத்தல்

Posted: 24 Mar 2013 09:04 AM PDT


ரோட்டின் மேடு, பள்ளங்களை கண்டறியும் "சென்சார்' கருவியை கண்டுபிடித்து உள்ளனர், மதுரை கே.எல்.என்., தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாலமாடசாமி, நிர்மல், யஷ்வந்த், பாண்டி, ராகுல் குமார், வெங்கடேஷ் பாபு.

கண்டுபிடிப்பு குறித்து, அவர்கள் கூறியதாவது: சாலை அமைப்பதற்கு முன் பள்ளம், மேட்டை "டம்பி லெவல்' "டெலஸ்கோப்' கருவி மூலம் அளவிட வேண்டும். 

இந்த அளவீடுகளை "கிராப்' வடிவில் கொண்டு வந்து, அதன்பின் பள்ளம், மேட்டை கணக்கிடுவது தான் தற்போதைய முறை. மேலும் குறிப்பிட்ட நீளத்திற்கு ஒருமுறை, மீட்டர் அளவில் பள்ளம், மேடு கணக்கிடப்படும். நாங்கள் கண்டுபிடித்த "சென்சார்' மூலம், ரோட்டின் மேடு, பள்ளங்களை தானாக அளவிட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்.

 "கிராப்' அமைத்துத் தருவதன் மூலம், மேடு, பள்ளங்களை மி.மீ., அளவு வித்தியாசத்தில் துல்லியமாக கண்டறியலாம். அதற்கேற்ப பள்ளமான இடத்தை சரிசெய்யலாம். புதிதாக ரோடு அமைப்பது மட்டுமின்றி, ஏற்கனவே அமைத்த ரோட்டில் பள்ளம் இருந்தாலும் கண்டறியலாம்.

 நாங்கள் வடிவமைத்துள்ள "சென்சார்' கருவியை, காரின் அடியில் பொருத்தி, ரோட்டில் சீரான வேகத்தில் செல்லும் போது, அளவுகள் பதிவு செய்யப்படும். போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் பட்சத்தில், "ஹெலிகாப்டர் மூலம் அளவெடுக்கலாம். இதில் கேமராவையும் இணைக்கலாம். 

இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு சரிபார்க்க, வயர்லெஸ் கருவி, கம்ப்யூட்டர் முறையிலும் "சென்சாரை' அமைக்கலாம்; நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும், என்றனர்.

"பட்டத்து யானை" ஐஸ்வர்யா சுறுசுறுப்பு

Posted: 24 Mar 2013 09:01 AM PDT


ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விஷாலுடன் நடிக்கும் "பட்டத்து யானை" படப்பிடிப்புகள் திருச்சி பகுதியில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. பூபதி பாண்டியன் இயக்கிக் கொண்டிருக்கிறார். 

காரைக்குடியில் ஓட்டலில் வேலை பார்க்கும் விஷாலும் சந்தானமும், திருச்சியில் சொந்தமாக ஓட்டல் தொடங்க வருகிறார்கள். வந்த இடத்தில் அவர்களுக்கு ஜெகன் நண்பராகிறார். 

ஐஸ்வர்யா விஷாலின் காதலியாகிறார். இந்த நால்வரும் சேர்ந்து ஓட்டல் ஆரம்பிப்பதும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் சிரிப்பு தொல்லைகளும்தான் சினிமாவாகிறது.

முதல் படம் என்பதால் ஐஸ்வர்யா படு சுறுசுறுப்பாக நடித்து வருகிறாராம். தனது காட்சி இல்லாவிட்டாலும் மற்ற காட்சிகள் எடுக்கப்படுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். 

விஷாலிடம் மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் கலகலப்பாக சிரித்து பேசுகிறாராம். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கூடும் பொது மக்கள் ஐஸ்வர்யாவிடம் "நீங்க ஆக்ஷன் கிங் மகளா?"

 என்று அவரை ஆச்சர்யத்தோடு பார்த்து கொஞ்சுறாங்களாம். திருச்சி போர்ஷனை முடித்து விட்டு பட்டத்து யானை பாட்டுக்காக ஃபாரினுக்கு பறக்கிறது.