techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


ஆதித் தமிழர் வாழ்ந்த லெமூரியா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதா?

Posted: 01 Mar 2013 11:29 AM PST



சென்னை: ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!.

இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த உலகமே ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் இவை ஒவ்வொன்றாக படிப்படியாக விலகி இருக்கின்றன. இப்படி விலகியவின் மிகப் பெரும் பகுதி இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும் அதன் ஒரு நிலப்பரப்பு தற்போது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.

இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் இந்த நிலப்பகுதியானது சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அண்மையில் மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு போதுதான் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவையாம்.மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்றும் இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சரி இந்த மொரிஷியாவுக்கும் நம்ம லெமூரியா கண்டத்துக்கும் என்ன தொடர்பு? ஆதித் தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் நம்ம லெமூரியா கண்டம்தான் அந்த மொரிஷியாவா என்ற தேடல் தொடங்கியிருக்கிறது...இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்!

ஹரிதாஸ் – சிறப்பு விமர்சனம் (இந்தப்படத்தை நீங்க கண்டிப்பா பார்த்தே ஆகணும் ஏன்..?)

Posted: 01 Mar 2013 11:24 AM PST


தமிழ்சினிமாவின் சமகால படங்களை நான் பார்த்தோமானால் அறிமுக இயக்குனர்களிடம் இருக்கின்ற புத்திசாலித்தனமும், கலாச்சார சிந்தனைகளும் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் படம்பிடிக்கப்பட்டிருப்பதை காண முடியும்.

அதிலும் குறிப்பாக ஒரு படத்தின் வியாபார நோக்கம் என்பதையும் தாண்டி ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மனதில் பதிக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களின் படைப்புகளில் ஆழமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த படம் தான் இந்த ஹரிதாஸ்.

ஆட்டிசம் என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மகன், அவனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அப்பா என சேரனின் 'தவமாய் தவமிருந்து' படத்திற்கு அடுத்தபடியாக தந்தை-மகன் உறவை வேறொரு கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.

இந்தியாவில் 1கோடி குழந்தைகள் "ஆட்டிசம்' என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த பாதிப்பு இருக்கிறது என்று புள்ளி விவரம் சொல்கிறது. இந்த பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இந்த ஹரிதாஸ்.

எப்படி ஒரு படத்தின் முதல் காட்சியிலேயே அதன் இரண்டரை மணி நேர ஓட்டத்துக்கான விஷயங்கள் நமக்கு தெரிய ஆரம்பித்து விடுமோ அதேபோல இந்தப்படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகிறார் படத்தின் டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.

வயது 10 ஆகியும் வாய் பேசாமல் இருக்கும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனை தனது வயதான அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கிறார் கிஷோர். ஆனால் வயதான அம்மா இறந்து போனவுடன் தனிமைப் படுத்தப்படும் மகனுக்கு இனி தான் தான் எல்லாமும் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் கிராமத்திலிருந்து அவனை நகரத்திலுள்ள தனது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்.

எதையுமே உணர்ந்து கொள்ள முடியாத அவனை எப்படி வளர்த்தெடுப்பது என்ற கவலையில் டாக்டர் யூகிசேதுவை பார்க்கப் போகிறார். அவரோ உங்கள் மகனுடைய உடலில் எந்தப்பிரச்சனையும் இல்லை, மனதில் தான் பிரச்சனை அதற்கு ஒரே வழி அவனை இந்த உலகத்துக்குள் கொண்டு வர முயற்சிப்பதை விட, நீங்கள் அவனுடைய உலகத்துக்குள் செல்லுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார்.

அவர் சொன்னபடியே தன் மகனுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கும் ஒரு உண்மையான தந்தையின் அன்பின் வெளிப்பாடு தான் மொத்தப் படமும்.

ஹீரோவாக கிஷோர், மிகச்சரியான தேர்வாக அவரைப் பார்க்க முடிகிறது ஒரு கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், ஒரு பாசமான, பொறுப்பான அப்பாவாகவும் அவரைத் தவிர வேறு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு ஒரு அபாரமான,இயல்புத்தனம் மாறாத நடிப்பு.

படத்தில் ஹீரோயின் என்று சொல்வதை விட டீச்சர் என்ற அந்த கதாபாத்திரமாகத்தான் சினேகாவை நாம் சொல்ல வேண்டும். ஏனென்றால் படத்தில் அவருக்கு டூயட் இல்லை, ரொமான்ஸ் சீன்கள் இல்லை, மாறாக ஒரு பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தும் டீச்சராக வருகிறார் சினேகா.

சிறுவன் மீது அவர் எடுக்கும் அக்கறையாகட்டும்,அவன் காணாமல் போனவுடன் தவிக்கும் தவிப்பாகட்டும், பிறகு அவனுக்காக கிஷோரை திருமணம் செய்வதற்கு தயாரான மனநிலையாகட்டும் இப்படி எல்லா நிலைகளிலும் தனது பங்கை மிக அழகாகச் செய்திருக்கிறார் சினேகா.

பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு அவர்களுடைய திருமணத்துக்குப் பிறகு இப்படி சிறந்த படங்கள் ரிலீஸாக அமைவது அபூர்வம். ஆனால் சினேகா அதில் கொடுத்து வைத்தவர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக வரும் மாஸ்டர் பிரித்விராஜ், அளவான முகபாவங்களை அனாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டு பயிற்சி ஆசிரியராக வரும் ராஜ்கபூர், இரண்டு மூன்று சீன்களில் மட்டுமே டாக்டராக வரும் யூகிசேது என படத்தில் பிரயாணப்பட்டிருக்கும் அத்தனை கேரக்டர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் காமெடி வேண்டும் என்பதற்காக 'பரோட்டோ' சூரியை நடிக்க வைத்திருப்பது படத்தில் எரிச்சலைத் தரும் காட்சிகளாகத்தான் உள்ளது.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவாகட்டும், விஜய் ஆண்டனியின் பின்னணி இசையாகட்டும், காட்சிக்கோர்வைகளாகட்டும் எல்லாமே இந்தப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

எந்தவித சமரசமும் இல்லாமல் தான் எடுக்க நினைத்த விஷயத்தை அப்படியே படமாக்கித் தந்த டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள். இதுபோன்ற சிறந்த படங்களைத் தர வேண்டிய சமூகப்பொறுப்பு படைப்பாளிகளுக்கு மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட படங்களுக்கு ஆதரவு தரும் பொறுப்பு ரசிகர்களிடமும் உள்ளது.

ஸ்ரேயா ரொம்பவே அழகு…! மேடையில் நடிகர் விவேக்கின் ஜொள்ளு!!

Posted: 01 Mar 2013 11:23 AM PST


சென்னை: நாளுக்கு நாள் நடிகை ஸ்ரேயா அழகாகிட்டே வர்ராங்க என்று நடிகர் விவேக் நிகழ்ச்சியொன்றில் பேசினார்.

புதுமுக ஹீரோ பிரேம், ஸ்ரேயா நடித்த " சந்தரா" என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

விழாவில் காமெடி நடிகர் விவேக் பேசியதாவது :

நான் இந்தப்படத்தோட கன்னட வெர்ஷன்ல ஃபுல்லா கன்னடம் பேசி நடிச்சிருக்கேன். அதை இங்க போட்டுருந்தா… அதுதான் பெரிய காமெடியா இருந்திருக்கும். பட் அவங்களுக்கு அங்க அது பெரிய காமெடியா இருந்துருக்கும்னு நெனைக்கிறேன்.

பொதுவாக படத்தோட ஹீரோயின்தான் அழகா இருப்பாங்க. ஆனால் இங்க இந்தப் படத்தோட டைரக்டர் ரூபா ஐயரும் அழகா இருக்காங்க.. இங்க டைரக்டருக்கும், ஹீரோயினுக்கு போட்டியா இருக்கு.

மத்த எல்லாப்படத்தை விடவும் இந்தப்படத்துல ரொம்ப அழகா இருக்காங்க ஸ்ரேயா, இதை நான் ஒவ்வொரு பங்ஷன்லேயும் சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அழகு ஸ்ரேயா. நாளுக்கு நாள் அழகாயிட்டே வர்ராங்க ஸ்ரேயா என்றார் அவர்.

மேடையில் விவேக் விட்ட ஜொள்ளைப் பார்த்து ஆடியன்ஸ் சைடில் இருந்தே எழுந்த கோஷம் அடங்க அதிக நேரமானது.


Short story in English

Actor Vivek has praises Actress Shriya in a movie audia release function held in Chennai yesterday.

“நாடகமாடுகிறார் கருணாநிதி… உண்மையாகப் போராடுகிறார் ஜெயலலிதா!”

Posted: 01 Mar 2013 11:22 AM PST

புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே' சொல்லிப் புன்னகைக்க… "இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!" என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ.

+ "நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது… மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?"

"அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு குவிந்துவிட்டார்கள். இது தமிழகத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். உலகிலேயே உழைப்புக்குப் பெயர்போன தமிழர்களை மதுவும் இலவசமும் முடக்கிப்போட்டுவிட்டது. அதனால்தான் இந்த நடை பயணம். நான் நடை பயணத்தில் எங்கேயும் அரசியல் பேசவில்லை; என் கட்சிக்கு ஆதரவும் கேட்கவில்லை. வேதனையிலும் சோதனையிலும் வெந்து நொந்துகிடக்கும் தமிழர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்தவே இந்தப் பயணம்!"

+ "நடை பயணத்தில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதாவுடனான உங்கள் சந்திப்பின் பின்னணி என்ன?"

"முதல்வர் ஜெயலலிதா என்னைத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை. சாலையின் எதிர்ப்புறம் திடீரென முதல்வரின் கார் வருகிறது. நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே முதல்வரின் கார் நிற்கிறது. உடனடியாக அவர் இறங்கிவிட்டார். அவர் மனதில் முன்னரே என்னைச் சந்திக்கும் திட்டம் இருந்தால், காரில் இருந்து இறங்குவதற்கான படிக்கட்டைக் கொண்டுவரச் சொல்லி இருப்பார். ஆனால், அவர் அப்படியே காரைவிட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் குடை கூட இல்லாமல் என்னுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

நடை பயணத்தின் நோக்கம் என்னவென்று முதல்வருக்கும் தெரியும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி, நான் சொல்லத் தயங்குவேனோ என்று அவரே எனது கோரிக்கையைக் கேட்டார். முழு மதுவிலக்கு வேண்டும் என்றேன். அதை அவரும் கேட்டுக்கொண்டார். என்னைப் பொறுத்தவரை இது ஓர் அரசியல் நாகரிகம். அவ்வளவு தான். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது!"

+ "ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை முதல்வர் நடைமுறைப்படுத்துவார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?"

"நிறையவே! மதுவால் பெண்கள் படும் துன்பங்களை அவர் அறிவார். பல கோடிப் பெண்கள் மதுவிலக்கு வராதா என்று ஏங்குகிறார்கள். அந்த ஏக்கம் ஒரு பெண்ணான அவரது மனதிலும் வெகு விரைவில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!"

+ " 'எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். என்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம்' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் முதல்வர். காரை விட்டு இறங்கி வந்து உங்களைச் சந்திக்கிறார். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?"

"அவர் ஈழப் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது முதலே அவரது மனநிலை மாறித்தான் இருக்கிறது. இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற சட்டமன்றத் தீர்மானம், மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு, காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், ஆசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது என உண்மையாகப் போராடுகிறார் முதல்வர். கருணாநிதியின் நாடகங்களை ஒப்பிடுகையில், முதல்வர் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே சமயம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முற்பட்டபோதும், பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வின்போதும் அவரைக் கண்டிக் கத் தவறவில்லை!"

+ "தி.மு.க-வில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"தனது தந்தை இறந்தபோது அவரது ஈமச் சடங்குக்குக்கூடப் போகாமல் தலைவருடன் சுற்றுப்பயணத்தில் இருந்தவர் தா.கிருட்டிணன். அப்படிப்பட்ட தியாகி நடுரோட்டில் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டபோதே, அந்தக் கட்சியில் பேரறிஞர் அண்ணா ஊட்டி வளர்த்த பாசமும் கொள்கைகளும் சவக் குழியில் புதைக்கப்பட்டுவிட்டன. நியாயவான்கள் என்றால், அப்பீலுக்குப் போயிருக்க வேண்டியதுதானே… இப்போது என்ன சொல்ல…"

+ "பாலச்சந்திரன்…"

(கேள்வியை முடிக்கும் முன்பே…) "ஐயோ… பச்சைப் பாலகன் அவன். எதையோ வாயில் மென்றுகொண்டு வெறித்துப் பார்க்கும் அவன் கண்களைக் கண்டீர்களா? அதைக் கண்டால், எமனுக்குக்கூடப் பாசக்கயிற்றை வீச மனம் வராதே. அந்தப் பாலகனின் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் தந்த துன்பத்தைவிட, அவன் கண் முன்பாக ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் எவ்வளவு பெரிய ரணத்தை அளித்திருக்கும். இனப்படுகொலையை நிரூபிக்க இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும். இப்போதைய உடனடித் தேவை, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை!"

+ "19 ஆண்டுகளாகக் கட்சியை நடத்தி வருவதற்குரிய பலன் இல்லை என்று நினைக்கும்போது விரக்தி மனநிலை உண்டாகிறதா?"

"ராட்சத பலம்கொண்ட கட்சிகளுக்கு இடையிலும் எத்தனையோ துன்ப துயரங்களுக்கு இடையிலும் லட்சக் கணக்கான தொண்டர்கள் என்னுடன் இருப் பதே ஒரு சாதனைதான். மக்களின் அவப் பெயருக்கு ஆளாகாமல் நன்மதிப்பை பெற்று வருகிறேன். 'வெற்றியை ருசிக்கவில்லை' என்று எங்களைப் பார்த்துச் சொல்லலாமே தவிர, தவறானவர்கள் என்று சுண்டு விரலையேனும் நீட்ட முடியுமா? நாங்கள் குடும்பத்துக்காகக் கட்சி நடத்தவில்லை. நாங்கள் போராளிகள். போராளிகளுக்கு விரக்தியும் கிடையாது; தோல்வியும் கிடையாது.

முல்லைப் பெரியாறுக்காக 10 லட்சம் மக்களைத் திரட்டினோம். மிரண்டது கேரளா. சுற்றுச்சூழலை நாசம் செய்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறேன். பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல்முறையாக ஈழப் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்புகுறித்துப் பேசினேன். இவைதான் எங்கள் சாதனைகள். பதவியில் அமர்வதும்… பகட்டு வேஷங்கள் போடுவதும்தான் சாதனைகள் என்றால், அது இந்த வைகோவுக்கு ஒருபோதும் தேவை இல்லை!"

+ "ஆனால், உங்கள் நிர்வாகிகள் கட்சியைவிட்டு வரிசையாக வெளியேறுகிறார்களே? நீங்கள் மட்டும் உற்சாகமாக இருந்தால் போதுமா… தொண்டர்கள் சோர்ந்துபோக மாட்டார்களா?"

"இல்லை… இல்லை… இல்லை. எங்களைக் கண்டால், சோர்வுக்கே சோர்வு வந்துவிடும். நாங்கள் சாஞ்சிக்கே சென்று ராஜபக்ஷேவையும் மன்மோகன் சிங்கையும் அசைத்துப் பார்த்தவர் கள். சொந்தக் காசைச் செலவு செய்து எங்கள் கட்சியின் போர் வீரர்கள் டெல்லியை மூன்று முறை முற்றுகையிட்டார்களே… தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு இருக்கிறது இந்தத் துணிச்சலும் அர்ப்பணிப்பும். இதில் இருந்து தெரியவில்லையா… ம.தி.மு.க. முன்பைவிட வலுவாக இருக்கிறது என்று. கட்சி நிர்வாகிகள் ஓரிருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி இருக்கலாம். அப்படிச் சென்றவர்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை."

+ "ஆனால், ஓட்டு அரசியலே பிரதானமாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் உங்கள் வியூகம் எடுபடுமா?"

"எகிப்தில் வெடிக்கவில்லையா மல்லிகைப் புரட்சி? அதை யாராலும் கணிக்க முடியவில்லையே! தானாகத்தானே மக்கள் அங்கு வெகுண்டு எழுந்தார்கள். அப்படி ஓர் எழுச்சி தமிழகத்திலும் வராமலா போகும். அப்போது அவர்களுக்காக ஒரு மாற்று அரசியல் இயக்கமாக ம.தி.மு.க. இருக்கும்."

+ "மாற்று அரசியல் இயக்கமாக இருப்போம் என்கிறீர்கள்… ஆனால், கடந்த காலங்களில் தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறித்தானே கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?"

"1996 மற்றும் 2001-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அதன் பின்பு நடந்த தேர்தலில் தொண்டர்களின் அன்புக்கு அடிபணிந்து அ.தி.மு.க-வுடன் உடன்பாடுகொண்டோம். அதன்பிறகும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் மாறுபடவில்லை. ஆனால், சுயமரியாதை, தன்மானம் இவை எல்லாம் எங்கள் உயிருக்கு நிகர். அதனால் நாங்களாக விலகினோம்!"
+ "சரி… வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உங்கள் வியூகம் என்ன?"

"ஏன் சுற்றி வளைத்து? யாருடன் கூட்டணி என்று வெளிப்படையாகக் கேளுங்களேன். அதைப் பற்றி இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி… எங்கள் தன்மானத்தை, சுயமரியாதையை, மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை யாரிடமும் அடகுவைக்க மாட்டோம். அதே நேரத்தில், இந்த இயக்கத்துக்காக 19 ஆண்டுகாலம் சுகங்களை இழந்து துன்பங் களுடன் உழன்றுவரும் கட்சியின் தொண்டர்கள், அவர்கள் குடும்பத்தினரின் மன ஓட்டம், மகிழ்ச்சி இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டுதான் முடிவுகள் எடுப்பேன்!"

+ "சட்டென்று கோபப்படுபவர்; பொசுக்கென்று அழுதுவிடுபவர்; எளிதில் உணர்ச்சிவசப்படுபவரால் அரசியல் தளத்தில் வெற்றிகரமாக இயங்க முடியாது என்கிற இமேஜ் உங்கள் மீது இருப்பது தெரியுமா?"

"என் மீது கசப்பு கொண்டவர்கள் 15 ஆண்டுகளாகச் சொல்லும் விமர்சனம் அது. அவர்களுக்கு என் மீது குற்றம் சொல்ல வேறு காரணம் கிடைக்கவில்லை. மனிதநேயம் உள்ளவன், பிறர் துன்பம் கண்டு விழி நீர் சிந்துவான். என் கண்களில் வழியும் கண்ணீரும் அப்படியே. என் கண்கள் யாரைக் கண்டு பயந்தும் கண்ணீர் சிந்தாது. அக்கிரமத்துக்கும் அநீதிக்கும் எதிராக மட்டுமே என் கண்கள் சிவக்கும். அநாவசியத்துக்கு அல்ல. நான் நடிகன் அல்ல… உண்மையானவன். உண்மையானவனால் எந்தத் தளத்திலும் வெற்றிகரமாக இயங்க முடியும்!"

- நன்றி : விகடன்

டெல்லியில் அரங்கேறியது அடுத்த அவலம்! 7 வயது சிறுமி கற்பழிப்பு!!

Posted: 01 Mar 2013 11:19 AM PST



புதுடெல்லி: டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட அலை ஓய்வதற்குள் 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மோங்கோல்புரி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த சிறுமி (வயது 7) நேற்று மாலை, பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் மற்றும் காவலாளி ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காட்டூத்தீ போல பரவியது.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதனால் சில இடங்களில் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
Short story in English

New Delhi: The North Delhi MCD on Friday evening ordered an internal inquiry into the rape of a minor girl student at its Mangolpuri school.

பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்தது! சென்னையில் விலை லிட்டருக்கு ரூ.74!!

Posted: 01 Mar 2013 11:19 AM PST


புதுடெல்லி: மீண்டும் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திவிட்டன. லிட்டருக்கு ரூ.1.40 அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதலேயே இது அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்ததையடுத்து, சர்வதேச சந்தை நிலவரப்படி அவ்வப்போது விலை விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.40 அளவுக்கு அதிகரித்துள்ளன.

இதனால் இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அந்தந்த மாநில வரிகளுக்கு ஏற்ப இந்த விலை உயர்வில் மாற்றம் இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டருக்கு ரூ.1.83 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.74 ஆக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடைசியாக பிப்ரவரி 15-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.50-ம், டீசல் விலை 45 காசுகளும் உயர்ந்தன.


Short story in English

NEW DELHI: Petrol price was today hiked by Rs 1.40 per litre, the second big increase in rates in as many weeks. A rise in international oil prices and depreciation in rupee have necessitated a Rs 1.40 per litre increase in price of petrol with effect from midnight tonight, said a statement by Indian Oil Corporation (IOC).

Neeya Naana Ladies Special - 01-03-13 | Neeya Naana Ladies Special Show | Neeya Naana Vijay Tv Show

Posted: 01 Mar 2013 11:15 AM PST





Neeya Naana Ladies Special - 27-02-13 | Neeya Naana ladies Special Show | Neeya Naana Vijay Tv Show

Kattidam Kathai Solgirathu - Thanthi Tv History - Ice House

Posted: 01 Mar 2013 11:13 AM PST


Kattidam Kathai Solgirathu - Thanthi Tv History

Padalaam ketgalaam – Thanthi TV 01-03-2013

Posted: 01 Mar 2013 11:10 AM PST


Padalaam ketgalaam – Thanthi TV 01-03-2013

Sathiyam Sathiyame – Sasi Perumal Fasting & Total Alcohol Prohibition in Tamil Nadu

Posted: 01 Mar 2013 11:06 AM PST


50 Top interesting News 01-03-2013 | Zee Tamil TV News | Tamil News

Posted: 01 Mar 2013 11:32 AM PST


50 Top interesting News 01-03-2013 | Zee Tamil TV News | Tamil News

Nerpada Pesu – Puthiya Thalaimurai 01-03-2013

Posted: 01 Mar 2013 11:02 AM PST

Nerpada Pesu – Puthiya Thalaimurai 01-03-2013


Nerpada Pesu -2013-03-01- Sasi Perumal Fasting & Total Alcohol Prohibition in Tamil Nadu

Sri Lanka Naavy Attack on Tamil Nadu Fishermen & Katchatheevu – Ayutha Ezhuthu

Posted: 01 Mar 2013 11:01 AM PST


Sri Lanka Naavy Attack on Tamil Nadu Fishermen & Katchatheevu – Ayutha Ezhuthu

Ayutha Ezhuthu -2013-03-01- OR 1 March 2013- Sri Lanka Naavy Attack on Tamil Nadu Fishermen & Katchatheevu -Thanthi TV
Sri Lankan navy attacks Tamil Nadu fishermen:
Rameswaram, Tamil Nadu: A group of fishermen from Tamil Nadu were on Tuesday allegedly attacked by Sri Lankan naval men while they were fishing near Katchatheevu, fisheries department officials said.

The fishermen from this coastal area had ventured for fishing in 20 boats, officials said, adding, the Lankan naval men allegedly attacked them with ropes and steel pipes causing extensive damage to their fishing nets and communication equipment.

The officials, quoting a boat-owner, said they reportedly even stuffed sugar in the engine of one of the mechanized boats and paralysed it.
The fishermen alleged the naval personnel also seized the catch and warned that they would open fire next time if they were seen near Katchatheevu, an islet in the Palk Straits ceded to Sri Lanka by India in 1974.

Funny sport accidents

Posted: 01 Mar 2013 10:53 AM PST


Funny sport accidents

Top 10 Treadmill Fails

Posted: 01 Mar 2013 10:51 AM PST


Top 10 Treadmill Fails

Snakes on a roof

Posted: 01 Mar 2013 10:49 AM PST


Snakes on a roof

Sinhala Wedding Video

Posted: 01 Mar 2013 10:48 AM PST


Sinhala Wedding Video

New Tamil Songs 01-03-2013 | Puthiya Paadal Raj TV

Posted: 01 Mar 2013 09:54 AM PST


New Tamil Songs 01-03-2013 | Puthiya Paadal Raj TV
The latest box office hit songs collections in sequence. Puthiya padal was a flourishing television program in raj tv The host (Sonia Shree) gives information about songs of the film.

Raj Tv Tamil Cinema News – Vellithirai 01-03-2013

Posted: 01 Mar 2013 09:53 AM PST


Raj Tv Tamil Cinema News – Vellithirai 01-03-2013

The world’s richest man

Posted: 01 Mar 2013 09:52 AM PST


The world's richest man

Srikanth Deva and Prabhu Salamon at Nagarpuram Movie Audio Launch

Posted: 01 Mar 2013 09:50 AM PST


Srikanth Deva and Prabhu Salamon at Nagarpuram Movie Audio Launch

The Great Train Robbery

Posted: 01 Mar 2013 09:49 AM PST


The Great Train Robbery

மணமகளை பல்லக்கில் தூக்கும் கனேடிய தமிழர்! (வீடியோ)

Posted: 01 Mar 2013 09:47 AM PST

கனடாவில் புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பங்களின் வீட்டுக் கலியாணம் ஒன்றின் வீடியோ காணொளி இது.

கோடிக் கணக்கில் செலவு செய்து இத்திருமணத்தை நடத்தி இருக்கின்றனர் போல தெரிகின்றது.

மணமகளை பல்லக்கில் தூக்கி வருகின்றனர்.

சந்தனம் மிஞ்சினால்…. எங்கெல்லாமோ பூசுவார்கள் என்பது சரிதான்.

இவ்வீடியோவை யூ ரியூப்பில் பதிவேற்றியும் உள்ளனர்.

ஆனால் பிரபலப்படுத்துகின்றமைக்காக இந்திய திருமணம் என்று இதில் தலையங்கம் போட்டு உள்ளனர்.


Phenomenal Catch by Ball Girl SpiderWoman Style

Posted: 01 Mar 2013 09:45 AM PST


Phenomenal Catch by Ball Girl SpiderWoman Style

Traffic accidents

Posted: 01 Mar 2013 09:39 AM PST


Traffic accidents